fbpx

பொதுமக்களே கவனம்.‌.‌ அரசு சார்பில் கறவை மாடுகள்‌ வாங்க ரூ.45,000 மானியம்…! எப்படி விண்ணப்பிப்பது…?

சேலம்‌ மாவட்டத்தில்‌ ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினர்‌ கறவை மாடுகள்‌ வாங்க திட்டத்தொகை ரூ.150 இலட்சத்திற்கு தாட்கோ மானியமாக ரூ.45,000/- வழங்கப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது ; தாட்கோ மூலம்‌ செயல்படுத்தப்படும்‌ ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினருக்கானபொருளாதார மேம்பாட்டுத்‌ திட்டத்தில்‌ மாண்புமிகு ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினர்‌‌ நலத்துறை அமைச்சர்‌ அவர்களின்‌ அறிவிப்பில்‌ 500 ல்‌ 450 ஆதிதிராவிடர்களுக்கும்‌ மற்றும்‌50 பழங்குடியினருக்கும்‌ தாட்கோ மூலம்‌ செயல்படுத்தப்படும்‌ பொருளாதாரமம்பாட்டுத்திட்டத்தின்‌ கீழ்‌ ரூ.7.50 கோடி மதிப்பீட்டில்‌ மானியம்‌ ரூ.2.25 கோடி, வங்கி கடன்‌ ரூ.487 கோடி என முடிவு செய்யப்பட்டு, கறவை மாடு வாங்க ஒதுக்கீடு அரசாணை வரப்பெற்றுள்ளது.

இதனைத்‌ தொடர்ந்து, சேலம்‌ மாவட்டத்திற்கு 18 ஆதிதிராவிடர்களுக்குமானியம்‌ ரூ.45,000/ வீதம்‌ ரூ.810 இலட்சம்‌ ஆகவும்‌, பழங்குடியினர்‌ 3 பேருக்கு தலா 45,000/- வீதம்‌ ரூ.135 இலட்சம்‌ இலக்கு நிர்ணயித்து அரசாணை வரப்பெற்றுள்ளது. இத்திட்டத்தில்‌ பயன்பெற ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினராக ஒருத்தல்‌வேண்டும்‌. வயது 18 முதல்‌ 65 வயதுவரை இருக்க வேண்டும்‌, குடும்ப ஆண்டு வருமானம்‌ 3 இலட்சத்திற்குள்‌ இருக்க வேண்டும்‌. விவசாயம்‌ சார்ந்த தொழில்‌ செய்பவராக இருக்க வேண்டும்‌‌. தாட்கோ திட்டத்தில்‌ இதுவரை மானியம்‌ பெற்றிருக்க கூடாது, இத்திட்டத்தின்‌கீழ்‌ நிர்ணயிக்கப்படும்‌ திட்டத்‌ தொகை ரூ.150,000-இல்‌ 30% சதவீத மான்யம்‌ அதாவது ரூ.45,000/- மானியமாக விடுவிக்கப்படும்‌.மூமற்படி திட்டத்தில்‌ பயன்பெற சம்பந்தப்பட்ட அரசு கால்நடை மருத்துவரிடம்‌ உரிய காப்பீடு செய்து சான்றிதழ்‌ பெற்றிருக்க வேண்டும்‌.

ஆதிதிராவிடர்‌ பயனாளிகள்‌ http://application.tahdco.com/ என்ற இணையதளத்திலும்‌ மற்றும்‌ பழங்குடியினர்‌ http://fast.tahdco.com/ என்ற இணையதளத்திலும்‌ பதிவு செய்து பயன்பெறலாம்‌.

Vignesh

Next Post

இனி சீட் பெல்ட் கட்டாயம்.. மீறினால் ரூ.1000 அபராதம்... காவல்துறை எச்சரிக்கை..

Thu Sep 15 , 2022
காரில் பயணிப்போர் கட்டாயம் சீட் பெல்ட் அணியவேண்டும் எனவும், மீறினால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என்றும் டெல்லி போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.. மோட்டார் வாகனச் சட்டத்தின் பிரிவு 194B (பாதுகாப்பு பெல்ட்கள் மற்றும் குழந்தைகள் இருக்கைகளைப் பயன்படுத்துதல்) ஆகியவற்றின் கீழ் சீட் பெல்ட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.. இந்த நடைமுறை ஏற்கனவே அமலில் இருந்தாலும், பலரும் இதை பின்பற்றவில்லை.. எனினும் இதுகுறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தற்போது போக்குவரத்து காவல்துறையினர் வாகன […]

You May Like