fbpx

பிஸ்கட்டை நொறுக்கி, சிறுவனை முட்டி போட்டு நாய்குட்டி போல் சாப்பிட சொன்ன ஆசிரியர்! கொதித்தெழுந்த பெற்றோர்!

ராசிபுரம் அருகே மூன்றாம் வகுப்பு மாணவனுக்கு வன்கொடுமை செய்த ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள அரசு பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றி வந்தவர் மணிகண்டன். கடந்த சில நாட்களுக்கு முன்பு தொட்டியப்பட்டி அரசு தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் விடுப்பு எடுத்து இருந்ததால் அங்கு மாற்று பணிக்காக மணிகண்டனை நியமித்திருந்தது மாவட்ட கல்வி நிர்வாகம். இதனைத் தொடர்ந்து மாற்று ஆசிரியராக
தொட்டியப்பட்டி அரசு தொடக்கப் பள்ளிக்குச் சென்றிருக்கிறார் மணிகண்டன்.

பள்ளிக்கு சென்ற மணிகண்டன் அங்கிருந்த இரண்டு சிறுமிகள் மற்றும் மூன்றாம் வகுப்பு படிக்கும் ஒரு சிறுவன் ஆகியோரை அழைத்து அருகில் உள்ள கடைக்கு சென்று பிஸ்கட் மற்றும் தின்பண்டங்கள் வாங்கி வரச் சொல்லி இருக்கிறார். அப்போது குழந்தைகள் வேறு வேறு பிராண்டில் பிஸ்கட் வாங்கி சென்றிருக்கின்றன. இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியர் மறுபடியும் அந்த குழந்தைகளிடம் தெளிவாக விளக்கி பிஸ்கட் வாங்கி வருமாறு அனுப்பி இருக்கிறார் மறுபடியும் குழந்தைகள் தப்பான பிராண்டை வாங்கி வந்ததால் அந்த பிஸ்கட்டை தரையில் அடித்து பிஸ்கட் உடைந்ததும் அதனை அந்த சிறுவனை மண்டி போட்டு சாப்பிட சொல்லி இருக்கிறார். பள்ளி முடிந்ததும் வீட்டுக்கு சென்ற சிறுவன் இது தொடர்பாக தனது தாயிடம் புகார் கூறியுள்ளான். இதனைத் தொடர்ந்து அவர்கள் பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டு பின்னர் ராசிபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆசிரியரின் மீது மாவட்ட கல்வி நிர்வாகமும் விசாரணை நடத்தியது. இந்த விசாரணைகளில் அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் மாவட்ட நிர்வாகம் அவரை உடனடியாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டது.

Baskar

Next Post

இந்த செடியை வளர்த்தால் லட்சங்களை குவிக்கலாம்..!! அது என்ன செடி தெரியுமா..?

Sun Mar 26 , 2023
இன்றைய காலத்தில் புதிய தொழில் யுக்திகளை மேற்கொண்டு அதில் வெற்றி பெற பலரும் முயற்சிக்கின்றனர். சிறிய முதலீட்டில் நல்ல லாபம் சம்பாதிக்க விரும்பினால், அதற்கும் சில வணிக யோசனைகள் உள்ளன. அப்படித்தான் ஒரு தொழில் நம் நாட்டில் முதலீடு மூலம் லட்சங்களில் கிடைக்கும் வகையில் பிரபலமடைந்துள்ளது. அது தான் போன்சாய் மர வளர்ப்பு தொழிலாகும். வெறும் ரூ.20,000 முதலீட்டில் போன்சாய் செடியை பயிரிட்டு லட்சங்கள் வரை பலர் வருமானம் ஈட்டி […]

You May Like