ஒரிசாவில் நடைபெற்ற ரயில் விபத்து குறித்து ஒடிசா மாநிலத்துக்கு சென்ற அதிகாரிகள் குழு இன்று சென்னைக்கு திரும்புகிறது.
அமைச்சர்கள் உதயநிதி சிவசங்கர் உள்ளிட்டோர் நேற்று சென்னைக்கு வந்த நிலையில், அதிகாரிகள் இன்று இரவு சென்னைக்கு திரும்புகின்றனர். பணீந்திர ரெட்டி, அர்ச்சனா பட்நாயக், குமார் ஜெயந்த் உள்ளிட்டோர் மீட்பு பணிகளுக்கு உதவுவதற்காக ஒடிசாவுக்கு சென்றனர்.
கோரமண்டல் ரயில் விபத்தில் தமிழர்களின் நிலை தொடர்பான விவரத்தை சேகரிப்பதற்காக தமிழக குழு அங்கு சென்று இருந்தது. ஒடிசா மாநிலத்தில் பாலாசூர் மாவட்டத்தில் கோரமண்டல் விரைவு ரயில், பெங்களூரு ஹவுரா விரைவு ரயில் மற்றும் சரக்கு ரயில் ஒன்று என 3️ ரயில்கள் மோதி விபத்துக்குள்ளாயினர் இந்த இந்த விபத்தில் 275 பேர் பலியாகி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.