fbpx

சோகம்..!! இயந்திரத்தில் சிக்கிய பெண்ணின் முடி.. உடல் வேறு.. தலை வேறாக பரிதாப மரணம்..!!

திருவள்ளூர் ஆவின் பால் பண்ணையில், இயந்திரத்தில் தலை ந்முடி சிக்கியதால், தலை துண்டாகி இளம் பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் காக்களூரில் ஆவின் பால் பண்ணை அமைந்துள்ளது. இந்த ஆவின் பால் பண்ணையில் ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் பணிபுரிந்து வருகின்றனர். ஒப்பந்த ஊழுயரான உமா மகேஷ்வரி என்ற பெண் வழக்கம் போல் பணி செய்து கொண்டிருந்தார்.

பால் பாக்கெட்டுகளை டப்பில் அனுப்பும் பணியில் ஈடுபட்டிருந்த போது, எதிர்பாராத விதமாக ஒப்பந்த ஊழியர் உமா மகேஸ்வரியின் முடி இயந்திரத்தில் சிக்கியுள்ளது. தொடர்ந்து முடி சிக்கி இழுத்ததில் தலை நசுங்கி இளம் பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இரத்த வெள்ளத்தில் துடிதுடித்த பெண்ணை மீட்டு அருகில் உள்ள மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் செல்லும் வழியிலேயே உயிரிழந்துவிட்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Read more ; ஐஸ்கிரீம் அதிகமாக சாப்பிடுவதால் இதய நோய் வருமா?. நிபுணர்கள் கூறுவது என்ன?

English Summary

A tragic incident has resulted in the tragic death of a young woman in the milk farm of Thiruvallur Aa, who got her head stuck in the machine.

Next Post

ரூ.40,000 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் வேலை...! ஆர்வம் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்..!

Wed Aug 21 , 2024
Bel announced job notification

You May Like