fbpx

‘வரட்டா மாமே.. டுர்ர்!!’ ஸ்மார்ட் சைக்கிளில் பாடிக்கொண்டே சென்ற ஸ்டாலின்..!! வைரலாகும் வீடியோ..

அமெரிக்கா சிகாகோவில் சைக்கிளில் பயணித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழக முதல்வர் ஸ்டாலின் அமெரிக்காவிற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக சென்றுள்ளார். அங்கு சுமார் பல கோடி ரூபாய் முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி வருகின்றது. சான் பிராசிஸ்கோ சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அங்குள்ள தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர், சான் பிராசிஸ்கோவில் நடைபெற்ற முதலீட்டாளர் மாநாட்டில் முதலமைச்சர் கலந்து கொண்டு பன்னாட்டுத் தொழில் நிறுவன உயர் அதிகாரிகள் முன்னிலையில் உரையாற்றினார். அப்போது சுமார் 900 கோடி ரூபாய் அளவுக்கு முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் ஸ்டாலின் நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஜிம்முக்கு செல்வது, விளையாட்டு என தன் உடலை பிட்டாக வைத்துக் கொள்கிறார். அந்த வகையில் முதல்வர்  ஸ்டாலின் காலையில் சைக்கிளில் ரைடு சென்றுள்ளார். அவர் ஜாலியாக பாட்டு படித்துக் கொண்டே சைக்கிள் ஓட்டிய வீடியோவை தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதற்கு முன்னதாக நேற்று அவர் டிரைவர் இல்லாத காரில் பயணம் செய்யும் வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்தார். மேலும் இதைத் தொடர்ந்து தற்போது சைக்கிளில் செல்லும் வீடியோவை வெளியிட்டுள்ளார். பொதுவாக பலரும் காரில் செல்வதையே விரும்பும் நிலையில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் கேசுவலாக சைக்கிளில் சென்றதோடு அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். முதல்வர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது : Evening’s calm sets the stage for new dreams என்று தெரிவித்துள்ளார். தற்பொழுது இந்த  வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Read more ; கால்வாயில் படகு கவிழ்ந்து விபத்து!. கர்ப்பிணி, 6 குழந்தைகள் உட்பட 12 பேர் பலி!.

English Summary

A video of Tamil Nadu Chief Minister M.K.Stalin riding a bicycle in Chicago, USA is going viral on the internet.

Next Post

சோகம்.. சிட்டிசன் பட வில்லன் நடிகர் காலமானர்..!! பிரபலங்கள் அஞ்சலி

Wed Sep 4 , 2024
Tamil cinema's famous villain actor and producer Mohan Natarajan passed away due to ill health. Celebrities mourned his death.

You May Like