திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த கனகம்மாசத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் கஜேந்திரன் இவரது மனைவி சுசிலா வயது 34. இந்தக் தம்பதிக்கு, குமரேசன் (15), கவுசிக் (13) என்ற இரு மகன்கள் உள்ளனர். கஜேந்திரன் மற்றும் சுசிலா இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணாமாக 10 ஆண்டுகளுக்கு முன்பு கனவனை பிரிந்து மகன்களுடன் தனியாக வசித்து வந்துள்ளார் சுசிலா. திருத்தணி காந்திரோடு பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வந்த சுசிலா வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலும் செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் இன்று தனியாக வீட்டில் இருந் சுசிலாவை அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் கத்தியால் குத்திவிட்டு சென்றுள்ளார். இரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த சுசிலாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருத்தனி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து, விசாரணை நடத்தினர்.
விசாரணையில் முத்துக்கொண்டாபுரம் கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சித்குமார் என்பவர் மீது போலிசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதனையடுத்து அவரிடம் நடந்த கிடுக்குப்பிடி விசாரணையில் சுசிலாவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். கணவனை பிரிந்து வாழ்ந்து வந்த சுசிலாவிற்கும் ரஞ்சித்குமாருக்கும் இடையே தகாத உறவு இருந்துள்ளது. இந்நிலையில் கள்ளக்காதலன் ரஞ்சித்குமாருக்கு கடன் பிரச்சினை இருந்துள்ளது. இதனால் சுசிலாவிடம் 2.5 லட்சம் ரூபாய் கேட்டுள்ளார், ஆனால் அதை தர மருத்துள்ளார் சுசிலா, இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சுசிலாவை கொலை செய்ததாக ரஞ்சித்குமார் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து ரஞ்சித்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.