fbpx

வேலை கிடைத்த குஷியில் ஆண் நண்பர்களுடன் மது விருந்து..!! பார்ட்டி கொடுத்த இளம்பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த கொடூரம்..!!

ஹைதராபாத்தில் 24 வயது ஐடி பெண் ஊழியர் ஒருவர், தனக்கு வேலை கிடைத்ததை கொண்டாடும் வகையில், தனது நண்பர்களுக்கு பார்ட்டி கொடுக்க முடிவு செய்துள்ளார். இதற்காக வனஸ்தலிபுரத்தில் அமைந்துள்ள தனியார் உணவகத்திற்கு அழைத்துச் சென்ற நிலையில் அங்கு இளம்பெண், அவருடன் சிறுவயதில் இருந்து படித்து வந்த ஒரு பெண் உள்பட ஆண் நண்பர்கள் சேர்ந்து தேவையானவற்றை சாப்பிட்டுள்ளனர்.

பின்னர் அனைவரும் அளவுக்கு அதிகமாக மது குடித்துள்ளனர். போதை அதிகமானதால் நிதானம் இழந்ததை உணர்ந்து அருகில் இருந்த விடுதியில் அறை எடுத்து தங்குவதற்கு முடிவு செய்துள்ளனர். அதன்படி, விடுதியில் அறை எடுத்து தங்கிய நிலையில், பார்ட்டி வைத்த இளம்பெண் நிதானம் இல்லாமல் இருப்பதை பயன்படுத்திக் கொண்ட ஆண் நண்பர், அப்பெண்ணை கொடூரமாக பலாத்காரம் செய்துள்ளார்.

மேலும், அப்பகுதியில் இருந்த தனது நண்பர்களையும் அழைத்து இளம்பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். சிறிது நேரம் கழித்து தனக்கு இழைக்கப்பட்ட கொடூரத்தை அறிந்து அப்பெண் அலறி துடித்துள்ளார். பின்னர், தனது சகோதரனுக்கு தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த அவர், இளம்பெண்ணை அழைத்துக் கொண்டு இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகாரளித்தார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read More : ”இனி ரேஷன் பொருட்கள் பாக்கெட்டுகளில் விற்பனை”..! முதற்கட்ட பணியை தொடங்கிய தமிழ்நாடு அரசு..!!

English Summary

Taking advantage of the drunkenness of the young party girl, her boyfriend brutally raped her.

Chella

Next Post

Wayanad landslides | புதைந்த உடல்களை எடுத்து செல்லும் ஆம்புலன்ஸ்கள்..!! நெஞ்சை பதற வைக்கும் காட்சி!!

Thu Aug 1 , 2024
Ambulances carrying dead bodies..!! Heartbreaking scene!!

You May Like