fbpx

சொத்துக்கு ஆசைப்பட்டு முதல் மனைவியின் குழந்தையை கொடூரமாக கொன்ற பெண்..!! அதிர்ச்சி வாக்குமூலம்..!!

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பஸ் நிலைய பின்புறம் வசிப்பவர் சந்திரசேகர் (37). இவர், முன்னாள் ராணுவ வீரர் ஆவார். இவரது மனைவி சுமதி. இவர்களது மகள் ஹேமா (6). இவர் பிறந்த 2 மாதங்களில் அவரது தாய் சுமதி உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். மனைவி இறந்த சில மாதங்களில் சந்திரசேகர், திருவண்ணாமலை மாவட்டம் காட்டேரி கிராமத்தை சேர்ந்த ராதிகா என்ற பெண்ணை 2-வது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண், ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் கடந்த ஆண்டு, சிறுமி ஹேமா திடீரென மயக்கம் அடைந்ததாக கூறி சந்திரசேகரும், அவரது மனைவி ராதிகாவும் சோளிங்கர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சோளிங்கர் போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கையில் முகத்தை அழுத்தியதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்தது தெரியவந்தது. இதையடுத்து, சோளிங்கர் போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து விசாரித்தனர். அதில், சந்திரசேகரின் 2-வது மனைவி ராதிகா, சிறுமியின் முகத்தை துணியால் அழுத்திக் கொன்றுவிட்டு மயங்கியதாக கூறி நாடகமாடியது தெரியவந்தது.

இந்த உண்மைகளை போலீசாரிடம் மறைத்து கொலைக்கு உடந்தையாக சந்திரசேகரும் இருந்துள்ளார். இதையடுத்து, இருவரையும் போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், தனது கணவர் பெயரில் உள்ள சொத்துக்கள் அனைத்தும் தனக்கு பிறந்த குழந்தைகளுக்கே சேர வேண்டும். முதல் மனைவியின் மகளுக்கு சேரக்கூடாது என ராதிகா திட்டமிட்டார். அதன்படி, சிறுமியை தலையணையால் அமுக்கி கொலை செய்துள்ளார். இதனிடையே கைதான தம்பதி இருவரையும் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.

Chella

Next Post

BreakingNews : தமிழகத்தில் 48 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்….! அருகருகே உள்ள மாவட்டங்களின் ஆட்சியாளர்களான கணவன் மனைவி….!

Wed May 17 , 2023
தமிழ்நாட்டில் நேற்று 16 மாவட்ட ஆட்சித் தலைவர்கள் உட்பட 48 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டிருக்கின்றனர். அந்த விதத்தில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தலைவராக நகராட்சி நிர்வாக இணை ஆணையர் விஷ்ணு சந்திரன் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். அதேபோல அதற்கு பக்கத்து மாவட்டமான சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவராக தமிழக தொழில் துறை வழிகாட்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக இருந்த ஆஷா அஜித் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். இந்த நிலையில், […]

You May Like