fbpx

தாய்பால் குடிக்கும்போது மூச்சு திணறி இறந்த 1 மாத குழந்தை! 7 வயது மகனுடன் தற்கொலை செய்து கொண்ட தாய்!

தனது கை குழந்தை இறந்த சோகத்தில் தனது மூத்த மகனை கொன்றுவிட்டு தாயும் தற்கொலை செய்த சம்பவம் கேரளாவில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கேரள மாநிலம் தொடுப்புழாவை சார்ந்தவர் லிஜா வயது 38. இவரது கணவர் வெளியூரில் தங்கி வேலை செய்து வருகிறார். இவருக்கு ஏழு வயதில் ஒரு மகன் இருக்கிறான். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தான் இவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் நேற்று மாலை குழந்தை அழுததை தொடர்ந்து அதற்கு தாய்ப்பால் புகட்டியிருக்கிறார் லிஜா

அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டது என அவரிடம் தெரிவித்திருக்கின்றனர். தன்னுடைய ஒரு மாத குழந்தை தன் கண் முன்னே இருந்ததால் மிகுந்த அதிர்ச்சியிலும் மனவேதனை நிலையம் இருந்திருக்கிறார் அந்த தாய். இதனைத் தொடர்ந்து யாருடனும் பேசாமலே இறுக்கமான மனநிலையிலேயே இருந்துள்ளார். இந்நிலையில் அவர் திடீரென தனது 7 வயது மகனுடன் அப்பகுதியில் உள்ள கிணத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதனைத் தொடர்ந்து தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு அவர்கள் வந்து உடலை மீட்டு காவல் துறையிடம் ஒப்படைத்தனர். காவல்துறையினர் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இது தொடர்பாக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். தன் ஒரு மாத கைக்குழந்தை கண் முன்னே இறந்த சோகத்தில் தனது இன்னொரு மகனையும் கொலை செய்து விட்டு தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கேரளாவில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Rupa

Next Post

"என்னையவாடா வேலையை விட்டு நிப்பாட்டுனீங்க......."! ஆத்திரத்தில் 12 காரில் அதிரடி சம்பவம் செய்த ஊழியர்!

Fri Mar 17 , 2023
நொய்டாவில் வேலையை விட்டு நீக்கியதால் ஆத்திரத்தில் கார் கிளீனர் செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் இருப்பவர்களை அதிர்ச்சியடைய செய்திருக்கிறது. நொய்டாவில் உள்ள ராம்ராஜ் நகரில் ஹவுசிங் சொசைட்டி என்ற அடுக்குமாடி கட்டிடம் இருக்கிறது. இங்கு பல்வேறு குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்தக் கட்டிடத்திற்கு சொந்தமான கார் பார்க்கிங்கில் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருப்பவர்களின் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருக்கும். இங்கு நிறுத்தப்பட்டிருக்கும் கார்களை சுத்தம் செய்வதற்காக ஒரு நபரை அந்த கவுசிங் சொசைட்டி சார்பாக […]

You May Like