திருவள்ளூர் அருகே மின்சாரம் தாக்கி கேபிள் டிவி ஆபரேட்டரின் மனைவி மரணம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. திருவள்ளூர் மாவட்டம் பட்டறை பெரும்புதூரைச் சார்ந்தவர் நாகராஜ். இவர் அப்பகுதியில் கேபிள் டிவி ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கீர்த்தனா வயது 30 இந்த தம்பதிகளுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இந்நிலையில் கீர்த்தனா வழக்கம் போல் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு துவைத்த துணிகளை காய போடுவதற்காக மொட்டை மாடிக்கு சென்றுள்ளார். அங்கு துணிகளை காயப்படும் போது தவறுதலாக ஈர கையுடன் கேபிள் டிவி உயிரை பிடித்து இருக்கிறார்.
இதனால் அவரது உடலில் மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்துள்ளார் கீர்த்தனா. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் 108 ஆம்புலன்ஸிற்கு உடனடியாக தகவலளித்தனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த மருத்துவ ஊழியர்கள் கீர்த்தனாவை பரிசோதனை செய்து பார்த்ததில் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். பெண்கள் வீட்டு வேலைகள் மற்றும் துணி காய வைப்பது போன்ற பணிகளின் போது ஏற்படுகின்ற சிறு அலட்சியம் நம் உயிருக்கு கூட மிகப் பெரிய ஆபத்தை விளைவிக்கும் ஒன்றாக அமைந்து விடும். அதனால் எப்போதும் எல்லா வேலைகளையும் கவனமாகவும் பதற்றம் இல்லாமலும் நிதானமாகவும் செய்ய வேண்டும். ஒருவேளை கொஞ்சம் தாமதமாவதால் எதுவும் ஆகிவிடாது.