fbpx

கரண்ட் பில்லுக்கு பயந்து பெண் செய்த செயல்! சுருண்டு விழுந்து பரிதாப பலி!

பிரிட்டனைச் சார்ந்த பெண்மணி ஒருவர் மின்சார கட்டணம் அதிகமாகிவிடும் என பயந்து வீட்டை வெப்பப்படுத்தாமலேயே வைத்திருக்கிறார். இதன் காரணமாக டிசம்பர் மாதம் ஏற்பட்ட கடும் குளிரில் சுருண்டு விழுந்து மரணம் அடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த உண்மை தற்போது விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது. பிரிட்டனின் பரி என்ற பகுதியைச் சார்ந்தவர் பார்பரா போல்டன் . இவர் மின்சார கட்டணம் அதிகமாகிவிடும் என பயந்து வீட்டில் ஹீட்டர்களை பயன்படுத்தாமல் இருந்து வந்திருக்கிறார். கடும் குளிர் நிலவும் காலம் ஹீட்டர்களை பயன்படுத்துங்கள் எனக் கூறிய அவரது குடும்பத்தார் ஹீட்டர்களை வாங்கி கொடுத்திருக்கின்றனர். ஆயினும் அவற்றை பயன்படுத்தாமல் இருந்து வந்துள்ளார்.

இது பற்றி கூறிய அவரது மகன் மார்க் தனது தாய் ஒரு பழமையான பெண்மணி என்று குறிப்பிட்டுள்ளார். நாங்கள் அவரைக் காண வரும் போது மட்டும் எனது தாய் ஹீட்டரை பயன்படுத்துவார் நாங்கள் சென்ற பின் மறுபடியும் ஆப் செய்து வைத்து விடுவார் என அவர் தெரிவித்திருக்கிறார். இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் பாட்டியை காண சென்று இருக்கிறார் மார்க் போல்டனின் மகன். அப்போது சமையலறையில் பேச்சு மூச்சில்லாமல் மயக்கம் அடைந்த நிலையில் இருந்திருக்கிறார் பார்பரா. இது தொடர்பாக தனது குடும்பத்தினரிடம் தெரிவித்த அவர் பாட்டியை அழைத்துச் சென்று மருத்துவமனையில் சேர்த்துள்ளார். ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார் பார்பரா. சம்பவம் தொடர்பாக நடைபெற்ற விசாரணை தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது. அதில் கடும் குளிரின் காரணமாகவும் வயது மூப்பு காரணமாகவும் பார்ப்பாரா மரணம் அடைந்ததாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் 82 வயது வரை மருந்தகத்தில் பணியாற்றிய பார்ப்பாராவை விசாரணை அதிகாரி வியந்து பாராட்டி இருக்கிறார்.

Baskar

Next Post

இனி ஆன்லைனிலும் ஆவின் பொருட்கள் விற்பனை!... நுகர்வோருக்கு ஸ்மார்ட் கார்டு!... புதிய அறிவிப்புகள் இதோ!

Thu Apr 6 , 2023
ஆன்லைனில் ஆவின் பால் பொருட்களை விற்பனை செய்வதற்கான வசதி ஏற்படுத்தப்படும் என்றும் நுகர்வோர் வசதிக்காக ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் பால்வளத்துறை அமைச்சர் நாசர் அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் பால்வளத்துறை மீதான மானிய கோரிக்கை நடைபெற்றது. அப்போது, சட்டப்பேரவையில் அமைச்சர் நாசர் பால்வளத்துறை சார்ந்த 48 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், பால் உற்பத்தியில் எருமை மாடுகளின் பங்களிப்பு முக்கியமாக உள்ளதால் ‘எருமைக் கன்று வளர்ப்பு திட்டம்’ நடைமுறைப்படுத்தப்படும் […]

You May Like