fbpx

“கைய விடுறீ….. பொறம்போக்கு…” டாஸ்மாக் போதையில் காதலன்! எட்டி உதைத்த காதலி!

‌ கடலூரில் ஷாப்பிங் மாலுக்கு வந்திருந்த பெண் தனது காதலன் டாஸ்மாக்கில் மது போதையில் இருப்பதை பார்த்து ஆத்திரத்தில் அவரை எட்டி உதைத்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களிலும் இணையதளத்திலும் வைரலாகி வருகிறது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் மேலவீதி அருகேயுள்ள ஷாப்பிங் மாலுக்கு பெண் ஒருவர் தனது தாயுடன் வந்திருக்கிறார். அப்போது அவரது காதலன் ஷாப்பிங் மால் அருகிலுள்ள டாஸ்மாக் மது கடையில் மது அருந்திவிட்டு போதையில் இருந்திருக்கிறார்.

இதனைக் கண்டு ஆத்திரமடைந்த அந்தப் பெண்மணி தனது காதலனை பொது இடம் என்றும் பார்க்காமல் அவரது சட்டையைப் பிடித்து கேள்வி கேட்டு திட்டினார். “கைய எடுடீ பொறம்போக்கு” என்று சொன்ன காதலனை “இப்படி இருந்தால் உனக்கு யார் பெண் கொடுப்பார்கள்” எனவும் கேட்டார். அப்போது அவரது காதலன் குறுக்கிட்டு எல்லோரும் பார்க்கிறார்கள் என தெரிவித்தான். அதற்கு பதிலடி கொடுத்த அந்த பெண்மணி “இந்த உலகமே உன்னை பார்க்கட்டும்” என்று கோபத்துடன் கூறினார். இந்தக் காட்சிகளின் இறுதியாக, ஆத்திரத்தில் இருந்த அந்தப் பெண் தனது காதலனை காலால் எட்டி உதைத்து விட்டு சென்று விட்டார். அவருடன் வந்த அந்தப் பெண்மணியின் தாயார் அவரை எவ்வளவோ சமாதானம் செய்தும் அவரால் சமாதானம் செய்ய முடியவில்லை. அந்தப் பகுதியிலிருந்த யாரோ ஒருவர் வீடியோ எடுத்து இந்தக் காட்சிகளை சமூக வலைதளங்களில் பதிவேற்றி இருக்கிறார்கள். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Rupa

Next Post

"போதும்..... இனிமேல் இந்த சித்திரவதைய....." தொடர் பாலியல் தொல்லை! 18 வயது சிறுமி தீக்குளித்து தற்கொலை!

Fri Mar 3 , 2023
திருவள்ளூர் அருகே சிறுமிக்கு தொடர் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததால் மனமுடைந்த அவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. திருவள்ளூர் அருகேயுள்ள பகுதியைச் சார்ந்த 18 வயது சிறுமி ஒருவர் 4 நபரால் தொடர் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டு வந்திருக்கிறார். அவர்களது நடவடிக்கைகள் எல்லை கடந்து கொடூரமாக செல்லவே மனமுடைந்த சிறுமி தனது வாழ்வை முடித்துக் கொள்ள நினைத்து தீக்குளித்து தற்கொலை செய்ய முயற்சி […]

You May Like