fbpx

“ஒரே குத்தில் புருஷன் காலி” துபாய்க்கு அழைத்துச் செல்லாத புருஷனுக்கு நேர்ந்த சோக முடிவு.! காவல்துறை கைது.!

மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் மனைவி கணவனை கொடூரமாக கொலை செய்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. மகாராஷ்டிரா மாநிலம் பூனே நகரை சேர்ந்தவர் நிகில் கண்ணா. 36 வயதான இவர் கட்டுமான துறையில் தொழிலதிபராக இருந்து வந்தார். இவரது மனைவி ரேணுகா கண்ணா(38). இவர்கள் இருவரும் கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதி புனே நகரின் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர்.

நிக்கில் தனது மனைவி ரேணுகாவை அவரது பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக துபாய் அழைத்து செல்வதாக கூறியிருக்கிறார். மேலும் விளைவு உயர்ந்த பரிசு பொருள் தருவதாகவும் வாக்குறுதி கொடுத்துள்ளார். இரண்டையும் நிறைவேற்றவில்லை. அவர்களது உறவினரின் பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்காக டெல்லிக்கும் செல்லவில்லை. இதனால் கணவர் மீது ரேணுகா ஆத்திரத்தில் இருந்துள்ளார்.

இது தொடர்பாக கடந்த வெள்ளிக்கிழமை இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருக்கிறது. இது வாக்குவாதத்தில் ஆத்திரம் அடைந்த ரேணுகா தனது கணவரின் முகத்தில் கைகளால் ஓங்கி குத்தி இருக்கிறார். இதில் நிகில் கண்ணாவின் மூக்கு மற்றும் பற்கள் உடைந்து அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் ரேணுகாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Post

’சேரி என்பது தவறான வார்த்தை கிடையாது’..!! ’என்னால் மன்னிப்பு கேட்க முடியாது’..!! நடிகர் குஷ்பு பரபரப்பு பேட்டி..!!

Sat Nov 25 , 2023
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு, “சேரி என்பது தவறான வார்த்தை கிடையாது. வேளச்சேரி, செம்மஞ்சேரி என்பது போலதான். அதற்கான விளக்கத்தையும் நான் தெளிவாக கொடுத்துள்ளேன். ‘சேரி’ என்ற வார்த்தை அரசு ஆவணங்களில் இருக்கிறது. வேளச்சேரி, செம்மஞ்சேரின்னு எல்லாம் இருக்கே, அதுக்கு என்ன அர்த்தம்..? இதற்கு மட்டும் போராட்டம் நடத்துவோம் என கூறும் காங்கிரஸ் கட்சியினர், ஒரு பெண்ணான என்னை எவ்வளவு கீழ்த்தரமாக பேச முடியுமோ அவ்வளவு கீழ்த்தரமாக […]

You May Like