பாஜகவின் அடுத்த அகில இந்திய தலைவராக, ஒரு பெண் தலைவர் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதா சொல்லப்படுகிறது. ஜெ.பி.நட்டா பதவி காலம் முடிவடைந்த நிலையில் அடுத்த அகில இந்திய தலைவர் பதவி ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பெண் தலைவர் மத்திய அமைச்சர் அன்னபூர்னா தேவிக்கு வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த போட்டியில் ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி.ஆர் மகளும், பாஜக ஆந்திரப்பிரதேச தலைவரும், எம்.பியுமான புரந்தரேஸ்வரியும் இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகலாம்.
நாடு முழுவதும் 13 மாநிலங்களில் பாஜக தலைவர்கள் அறிவிக்கப்பட்டதால் இம்மாதம் 3வது வாரத்தில் பாஜகவுக்கு புதிய தேசிய தலைவர் தேர்வு செய்யப்படுவார் என்றும், தமிழகத்திற்கு இந்த வாரம் அறிவிப்பு வெளியாகும் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன. பாஜக கட்சியை பொருத்தவரை அக்கட்சியின் தேசியத் தலைவர் என்பவர் தலா 3 ஆண்டுகள் தொடர்ந்து இரண்டு முறை பதவி வகிக்கலாம். பாஜக மூத்த தலைவர் ராஜ்நாத் சிங், 2014 மக்களவைத் தேர்தலில் கட்சி வெற்றி பெறும் வரை பதவியில் இருந்தார். அதன்பின் அமித் ஷா தேசிய தலைவரானார்.
அவரை தொடர்ந்து 2020 ஜனவரி முதல் பாஜக தேசிய தலைவராக தற்போதைய மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜெ.பி நட்டா இருந்து வருகிறார், மேலும் அவரது பதவிக்காலம் 2023ல் முடிவடைந்ததில் இருந்து பல முறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பாஜக தேசிய தலைவரை தேர்வு செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட பிரதமர் மோடி, நாக்பூரில் இருக்கும் ஆர்எஸ்எஸ் தலைமையகத்திற்கு சென்று அங்குள்ள மூத்த தலைவர்களிடம் ஆலோசனை நடத்தினார். பாஜகவின் உட்கட்சித் தேர்தல்கள் பல மாநிலங்களில் முடிவுற்றதால், புதிய தேசிய தலைவரை தேர்வு செய்யும் பணி அடுத்த சில நாட்களில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும்.
இந்த நிலையில் பாஜகவின் அடுத்த அகில இந்திய தலைவர் ஒரு பெண் தலைவர் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதா சொல்லப்படுகிறது. ஜெ.பி.நட்டா பதவி காலம் முடிவடைந்த நிலையில் அடுத்த அகில இந்திய தலைவர் பதவி ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பெண் தலைவர் மத்திய அமைச்சர் அன்னபூர்னா தேவிக்கு வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த போட்டியில் ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி.ஆர் மகளும், பாஜக ஆந்திரப்பிரதேச தலைவரும், எம்.பியுமான புரந்தரேஸ்வரியும் இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகலாம்.