மகளின் கண் முன்னே தாயை நிர்வாணமாக்கி அவரது உடல் பாகங்களில் மிளகாய் பொடியை தூவி கொடுமை செய்துள்ள கணவனை பற்றிய செய்தி இலங்கையில் அச்சத்தையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இலங்கை நாட்டின் அங்கம்பிட்டிய பிரதேசத்தைச் சார்ந்த பெண் ஒருவர் அங்குள்ள காவல் துறையினரிடம் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அந்தப் புகாரில் தனது கணவர் குடித்து விட்டு வந்து தன்னை வன்கொடுமை செய்வதாக குறிப்பிட்டு இருக்கிறார். தனது கணவர் தன்னுடைய கை கால்களை கட்டி நிர்வாணமாக்கி உடலில் மிளகாய் பொடிகளை தூவி கொடுமை செய்ததாக தெரிவித்திருக்கிறார் அந்த பெண்.
மேலும் இந்தக் கொடுமையின் உச்சகட்டமாக அவர்களது பதினோரு வயது மகளின் கண் முன்னே இந்தக் கொடுமையை அரங்கேற்றி இருக்கிறார் அவரது கணவர். இதனால் அவரது மகளும் மிகவும் அசௌகரியமாக இருப்பதாக அந்த புகாரில் தெரிவித்திருக்கிறார். தற்போது அந்தப் பெண்மணி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அவருடைய பெற்றோரிடம் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறார். அந்தப் பெண்ணினுடைய கணவர் காவல்துறையிடம் இருந்து தப்பிப்பதற்காக ஊரை விட்டு ஓடி விட்டார். அவரை காவல்துறை தீவிரமாக தேடி வருகிறது.