fbpx

பெற்றோர் பேச்சை மீறி திருமணம் செய்து கொண்ட இளம் ஜோடி! கடைசியில் நடந்த கொடூரம்!

90ஸ்-களில் பிறந்த ஆணும் சரி, பெண்ணும் சரி இன்னமும் அதே மனநிலையில் தான் இருக்கிறார்கள். ஆனால் தற்போது இந்த 2k கிட்ஸ் செய்யும் செயல்களுக்கு கொஞ்சம் கூட அளவே இல்லாமல் போய்விட்டது. சிறு வயதிலேயே பெற்றோர்களை மீறி திருமணம் செய்து கொள்வது, சிறு சிறு விஷயத்துக்கெல்லாம் பெரிய முடிவுகளை எடுப்பது என்று அவர்களின் எண்ணம் வித்தியாசமாகவே இருக்கிறது.

அந்த வகையில் வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு திருவிக நகரைச் சார்ந்தவர் ராஜா. இவர் ஒரு கூலித் தொழிலாளி என்று கூறப்படுகிறது. இவருடைய மகள் ராஜேஸ்வரி(19). இவர் ஸ்ரீதர் என்ற இளைஞரை காதலித்ததாக தெரிகிறது. பேரணாம்பட்டு ரங்கம்பேட்டை பகுதியை சார்ந்தவர் தான் ஸ்ரீதர்(20). இந்த நிலையில், இருவரும் காதலித்து வந்த விவகாரம் ராஜேஸ்வரியின் வீட்டிற்கு தெரிய வந்திருக்கிறது. ஆகவே ராஜேஸ்வரியின் பெற்றோர் இவர்களின் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள்.

அத்துடன் இந்த சிறிய வயதிலேயே தாங்கள் திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என்று அறிவுரையும் வழங்கி இருக்கிறார்கள். ஆனால் பெற்றோர்களின் அறிவுரையை காதல் ஜோடி ஏற்கவில்லை. பெற்றோரின் எதிர்ப்பை மீறி ராஜேஸ்வரி, ஸ்ரீதர் உள்ளிட்ட இருவரும் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து ஸ்ரீதரின் வீட்டில் காதல் ஜோடி இருவரும் தங்களுடைய வாழ்க்கையை ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனால் இவர்களுக்குள் திருமணமான அன்றே தகராறு வெடித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

காதல் ஜோடிக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக, அவ்வப்போது ராஜேஸ்வரி கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்று விடுவாராம். அந்த வகையில் 2 தினங்களுக்கு முன்னர் ஸ்ரீதர் மற்றும் ராஜேஸ்வரி உள்ளிட்டோரிடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதனால் கோபமடைந்த ஸ்ரீதர் ராஜேஸ்வரியை தாக்கியதாக கூறப்படுகிறது.

தன்னுடைய காதல் கணவரான ஸ்ரீதர் தன்னை அடித்து விட்டதால் கோபித்துக் கொண்ட ராஜேஸ்வரி, வீட்டை விட்டு வெளியேறினார். உடனடியாக ஸ்ரீதர் தன்னுடைய காதல் மனைவி கோபத்தில் அவருடைய பெற்றோரின் வீட்டிற்கு தான் சென்றிருப்பார் என்று நினைத்து தன்னுடைய மாமனார், மாமியாரிடம் முறையிடுவதற்காக ராஜேஸ்வரி சென்றவுடன் அவரும் வெளியே சென்றுள்ளார்.

ஆனால் இறுதியில் ராஜேஸ்வரி தன்னுடைய தாயாரின் வீட்டிற்கும் செல்லவில்லை என்பது தெரிய வந்திருக்கிறது. இதன் காரணமாக, அதிர்ச்சிக்குள்ளான ஸ்ரீதர், தன்னுடைய மனைவி ராஜேஸ்வரியை பல பகுதிகளில் தேடி உள்ளார். இந்த நிலையில், நேற்று கோகலூர் என்ற இடத்தில் இருக்கின்ற விவசாய கிணற்றில் ஒரு பெண்ணின் சடலம் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்திருக்கிறது.

மேலும் அந்த சடலத்தின் முகம் முழுவதும் துணியால் மறைத்து கட்டப்பட்டிருந்ததாகவும், கை, கால்கள் துப்பட்டாவால் கட்டப்பட்டு கிணற்றில் மிதந்தபடி இருந்ததாகவும் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்திருக்கிறது. இதனை அடிப்படையாகக் கொண்டு காவல்துறையினர் விரைந்து சம்பவ இடத்திற்கு சென்று இருக்கிறார்கள்.

மேலும் தீயணைப்பு துறை வீரர்களின் உதவியுடன் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனை செய்வதற்காக பேரணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். அதன் பிறகு நடத்தப்பட்ட விசாரணையில், சடலமாக கண்டெடுக்கப்பட்ட நபர் ஸ்ரீதரின் மனைவி ராஜேஸ்வரி தான் என்பதை காவல்துறையினர் உறுதி செய்தனர்.

இதற்கு நடுவே ராஜேஸ்வரியின் தந்தை ராஜா தன்னுடைய மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், இதற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் கைது செய்ய வேண்டும் எனவும் பேரணாம்பட்டு காவல்துறையில் புகார் வழங்கினார். அந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணையை ஆரம்பித்திருக்கிறார்கள்.

ராஜேஸ்வரியின் முகம் முழுவதும் துணியால் சுட்ட பட்ட நிலையில், கை மற்றும் கால்களை கட்டி கிணற்றில் வீசப்பட்டு அவரை கொடூரமான முறையில் கொலை செய்திருக்கிறார்களா? இல்லையேல் கை, கால்களை கட்டிவிட்டு அவரை பலாத்காரம் செய்து அதன் பிறகு கொலை செய்து கிணற்றில் வீசி உள்ளார்களா? என்று பல கோணங்களில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றார்கள்.

திருமணம் நடைபெற்று 3 மாதங்கள் மட்டுமே ஆனதால், குடியாத்தம் ஆர்டிஓ விசாரணையும் ஆரம்பமாகியுள்ளது. இது தொடர்பாக டிஎஸ்பி ராமமூர்த்தி தெரிவித்ததாவது, இளம் பெண் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டிருக்கிறார். ஆர்டிஓ விசாரணை நடத்தப்பட்டு வருகிறது, பிரேத பரிசோதனை அறிக்கை வந்தவுடன் தான் முழுமையான விவரம் தெரிய வரும் என்று கூறியுள்ளார்.

Kathir

Next Post

"அப்படி உன்கிட்ட என்ன இருக்கு"? கணவனின் கள்ளக்காதலியை வெறுப்பேற்றிய மனைவிக்கு அரங்கேறிய கொடூரம்!

Tue Dec 6 , 2022
முன்பெல்லாம் ஆண்கள் பல திருமணங்கள் செய்து கொண்ட தகவலை கேட்டிருப்போம். ஆனால் தற்போது ஆண்கள் ஒரு திருமணத்தை செய்து கொண்டு அந்த ஒரு திருமணத்தாலையே வாழ்க்கை மொத்தத்தையும் வெறுத்து விடுகிறார்கள். அந்த அளவிற்கு வாழ்க்கை அவர்களை புரட்டி போட்டு விடுகிறது. ஆனால் இந்த சமூகத்தில் இன்னொரு விதமான ஆண்களும் இருக்கிறார்கள். அதாவது திருமணத்தை செய்து கொண்டு, அந்த பெண்ணுடன் வாழ்க்கை நடத்தி குடும்பத்துடன் இருப்பதைப் போல காட்டி விட்டு பின்பு […]

You May Like