கோயமுத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவருக்கு திருமணமாகி தன்னுடைய கணவருடன் அந்த பகுதியில் வசித்து வந்தார்.அந்த இளம் பெண் அந்தப் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார் என்றும் கூறப்படுகிறது. அந்த சமயத்தில், அந்த நிறுவனத்தின் பணியாற்றி வந்த 44 வயது வாலிபருடன் அந்த இளம் பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
ஆகவே இருவரும் அவ்வப்போது தனிமையில் சந்தித்து உரையாடி வந்துள்ளனர். அத்துடன் அந்த வாலிபர் அந்த இளம் பெண்ணின் வீட்டிற்கும் அடிக்கடி வந்து சென்றதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, அக்கம்பக்கத்தில் இருந்தவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஆகவே அந்த இளம் பெண்ணின் கணவரிடம் இது பற்றி தெரிவித்துள்ளனர்.
ஆனால், தன்னுடைய மனைவியின் மீது வைத்திருந்த அளவு கடந்த நம்பிக்கையின் காரணமாக, அந்த இளம் பெண்ணின் கணவர் இதனை பெரிதாக கருதவில்லை. ஆனாலும் மனைவியின் நடவடிக்கையில் கொஞ்சம், கொஞ்சமாக மாறுதல் தெரிந்ததால், அவர் தன்னுடைய மனைவியை ரகசியமாக கண்காணிக்க தொடங்கினார். இதில் மனைவி அந்த வாலிபருடன் தொடர்பில் தான் இருக்கிறார் என்பதை அறிந்து கொண்டுள்ளார்.
ஆகவே இருவரையும் கையும், களவுமாக பிடிக்க வேண்டும் என்று நினைத்த அந்த இளம் பெண்ணின் கணவர், நேற்று முன்தினம் இரவு வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்தார்.அதன் பிறகு சற்று நேரத்தில், தனக்கு ஒரு வேலை இருக்கிறது என்று தன்னுடைய மனைவியிடம் தெரிவித்து விட்டு, வெளியே சென்றார். கணவர் வெளியே சென்றவுடன், அந்த இளம் பெண் தன்னுடன் வேலை பார்க்கும் நபரை வீட்டிற்கு அழைத்துள்ளார். அவரும் வீட்டிற்கு வந்து சேர்ந்தார்.
அதன் பிறகு இருவரும் வீட்டிற்குள் தனிமையில் இருந்தனர். இதனை அறிந்து கொண்ட அந்த இளம் பெண்ணின் கணவர், தன்னுடைய உறவினர்களுடன் வீட்டிற்கு வந்து, அந்த இளம் பெண்ணையும், அவருடைய ஆண் நண்பரையும், கையும், களவுமாக பிடித்துள்ளார்.
பின்னர் இருவரையும் அழைத்துக் கொண்டு, அன்னூர் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளனர். அங்கே காவல் துறையினர் 2 தரப்பினரிடமும் விசாரணை மேற்கொண்டனர். அதோடு அந்த இளம் பெண்ணுக்கு அறிவுரை தெரிவித்து அவருடைய சகோதரியுடன் அனுப்பி வைத்துள்ளனர்.
அதோடு அந்த வாலிபரை அழைத்து கடுமையான எச்சரிக்கை விடுத்து, அவருடைய மனைவியுடன் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். ஆனால் இது பற்றி காவல்துறை தொடர்ந்து, விசாரித்து வருவதாக கூறப்படுகிறது.