fbpx

கல்லூரி மாணவி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய இளைஞர்!… ஒருதலை காதலால் நிகழ்ந்த விபரீதம்!… ஆந்திராவில் அதிர்ச்சி!

ஆந்திராவில் காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி மீது இளைஞர் ஒருவர் கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் ஏலூர் பகுதியை சேர்ந்தவர் அனுதீப். அதே பகுதியைச் சேர்ந்த பிடெக் 2ம் ஆண்டு படித்து வரும் மாணவி ஒருவரை ஒருதலைபட்சமாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் மாணவியிடம் தனது காதலை வெளிபடுத்துவதற்காக, தனியாக பேச வேண்டும் என்று அந்த பெண்ணை அழைத்து சென்ற இளைஞர், அவரது வீட்டின் அறை ஒன்றில் கல்லூரி மாணவியை அடைத்து வைத்து காதலை வெளிப்படுத்தியுள்ளார்.

ஆனால் தனது காதலை ஏற்க மறுத்ததால், ஆத்திரமடைந்த அந்த இளைஞர் மாணவி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றி தாக்கியுள்ளார். இதையடுத்து, அங்கிருந்து தப்பித்த மாணவி தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இதையடுத்து தகவலறிந்து சம்பவம் இடத்திற்கு சென்ற போலீசார், சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மாணவி மீது எண்ணெய் ஊற்றி தாக்கிய இளைஞர் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Kokila

Next Post

உடல் எடையை குறைக்கும் எலுமிச்சை தோல் பானம்!... தினமும் ஒருவேளை குடித்து பாருங்கள்!... உடனடி ரிசல்ட்!

Mon Apr 24 , 2023
உடல் எடையை குறைப்பதற்கான ஆரோக்கிய பானத்தை எப்படி செய்யலாம் என்பதை இங்கே பார்ப்போம். நவீன காலத்திற்கேற்ப உணவு பழக்க வழக்கங்களால் பொதுவான உடல் பிரச்சனையாக உடல் பருமன் அதிகரிப்பு உள்ளது. பொதுவாக நிறைய பேருக்கு வெவ்வேறு காரணத்தினால் உடற்பருமன் அதிகரிக்கிறது.சில பேருக்கு தவறான உணவுப்பழக்கம் மூலமாகவோ தூக்கமின்மை மன உளைச்சல் காரணமாகவோ சில பேருக்கு அதிகளவு உடன் உணவுகளை உட்கொள்ளுவதனால் கூட உடற்பருமன் ஏற்படுகின்றது. உடற்பயிற்சியின்மையும் ஒரு முக்கிய காரணமாகும். […]

You May Like