சமீப காலமாக பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மற்றும் அவர்களை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பலவீனமாக்கும் விதத்தில், அவர்கள் குளிப்பதையும் அரை நிர்வாணமாக இருப்பதையும் வீடியோ எடுத்து ஒரு சில சமூக விரோதிகள் மிரட்டி, அதன் மூலம் அவர்களிடமிருந்து பணம் பறிப்பது மற்றும் அவர்களின் இச்சையை தீர்த்துக் கொள்வது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள்.
அந்த விதத்தில் கோவை மாவட்டத்தில் இருக்கின்ற அன்னூர் காவல் நிறைய பேருக்கு உட்பட்ட பகுதியில் 24 வயதான இளம் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய வீட்டில் பொறியியல் அறையில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு வாலிபர் ஜன்னல் வழியாக இளம் பெண் குளிப்பதை வீடியோ எடுத்திருக்கிறார்.
இதைக்கண்டு அந்த இளம் பெண் கூச்சலிட்டுள்ளார். ஆகவே அதை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதற்குள் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இது தொடர்பாக அந்த இளம் பெண் காவல் நிலையத்தில் புகார் வழங்கியிருக்கிறார்.
அந்தப் புகாரின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அதே பகுதியில் வசித்து வரும் கோகுலகிருஷ்ணன் என்பவர்தான் அந்த இளம் பெண் குளிப்பதை வீடியோ எடுத்தார் என்பது தெரிய வந்தது.
அதோடு காவல்துறையினருக்கு பயந்து செல்போனில் இருந்த வீடியோக்களை கோபாலகிருஷ்ணன் அழைத்துள்ளார். இதன் காரணமாக, கோகுலகிருஷ்ணன் காவல்துறையினர் கைது செய்து செல்போனை பறிமுதல் செய்திருக்கிறார்கள்