இரண்டாம் வகுப்பு மாணவி மத்தாப்பு பற்ற வைத்த போது ஆடையில் தீப்பற்றி படுகாயமடைந்ததில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ஈரோடு மாவட்டத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் திங்களூர் கிழக்குபுதூர் பகுதியைச் சார்ந்தவர் சரவணன் இவர் விவசாயம் செய்து வருகிறார். இவரது மகள் சஸ்விதா ஏழு வயதான அந்த குழந்தை அங்குள்ள பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறது. இந்நிலையில் குழந்தை சஸ்மிதா தன்னுடைய தாத்தா வீட்டிற்கு விசேஷத்திற்காக சென்றுள்ளது. அப்போது பூஜை அறையில் உள்ள விளக்கில் மத்தாப்பு பற்ற வைத்து விளையாடி இருக்கிறார் சிறுமி. எதிர்பாராத விதமாக மத்தாப்பு அவரது ஆடையில் பட்டு தீப்பிடித்து இருக்கிறது. பற்றிய தீ மளமளவென அவரது உடலெங்கும் பரவியது இதில் வலியால் துடித்த சிறுமியை மீட்ட குடும்பத்தினர் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து சம்பவம் அறிந்து வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமியை இழந்த பெற்றோர் கதறி அழுத சம்பவம் பார்ப்போரை கண்கலங்கச்செய்தது.