fbpx

மக்களே…! அரசு வழங்கும் சலுகைகள் பெற ஆதார் எண் அவசியமா….? கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்…!

ஆதார் அட்டை இப்போது இந்தியாவில் மிக முக்கியமான அடையாள ஆவணமாக மாறியுள்ளது. உங்கள் வங்கிக் கணக்குகள் முதல் வருமான வரி, வரை அனைத்தும் தற்ப்போது ஆதார் உடன் இணைக்க அரசு கட்டாயமாகியுள்ளது. அரசாங்கமும் பிற நிறுவனங்களும் வழங்கும் பல்வேறு சேவைகளுக்கு கட்டாய ஆதார் இணைப்பு தேவைப்படுகிறது. அரசின் நலத்திட்டங்கள் அனைத்திற்கும் ஆதார் எண் கட்டாயமாகிவிட்டது.

இந்த நிலையில் மக்கள் அரசின் சலுகைகளை பெற ஆதார் அவசியம் எனவும் ஆதார் ஒதுக்கப்படும் வரை, ஆதார் இல்லாதவர்களுக்கும் பலன்கள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மாநில அரசின் திட்டங்கள், சேவைகள், மானியங்களை பெறுவோர் அடையாள ஆவணமாக ஆதாரை அளிக்க வேண்டும். கருவூலங்கள் மற்றும் கணக்குத் துறையானது அரசு ஊழியர்களுக்கு சம்பளம், ஓய்வூதியம் போன்றவை ஆன்லைனில் வழங்கி வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசின் பலன்களைப் பெறுவதற்கு ஆதார் எண்ணை வழங்க வேண்டும். ஆதார் ஒதுக்கப்படும் வரை, ஆதார் இல்லாதவர்களுக்கும் பலன்கள் வழங்கப்படும். மேலும், கருவூலங்கள் மற்றும் கணக்குத் துறை மூலம் பயன்களை பெறுவோரின் ஆதார் தகவல்களை அந்த துறையே உறுதிசெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்..!! விற்பனையில் உள்ள இந்த 83 மருந்துகள் தரமற்றவை...

Sat Dec 17 , 2022
‘நாட்டில் விற்பனையில் உள்ள 83 மருந்துகள் தரமற்றவை’ என மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. இந்தியாவில் விற்கப்படும் அனைத்து வகையான மருந்து, மாத்திரைகளும், மத்திய-மாநில மருந்து தர கட்டுப்பாட்டு வாரியங்கள் ஆய்வு செய்கின்றன. அதேபோல், போலி மருந்துகளும் கண்டறியப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, நவம்பரில் 1,487 மருந்துகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அதில், உயர் ரத்த அழுத்தம், காய்ச்சல், சளி, கால்சியம், ஜீரண மண்டல பாதிப்புக்கு […]

You May Like