fbpx

தனியார் பள்ளிகளில் சேர ஆதார் எண் கட்டாயம் கிடையாது…! உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!

பொருளாதாரத்தில் நலிவடைந்த EWS, DG, CWSN மூன்று பிரிவுகளில் ஏதாவது ஒரு தனியார் உதவி பெறாத அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் சேருவதற்கு குழந்தையின் ஆதார் அட்டையை கட்டாயம் இல்லை என்ற டெல்லி அரசாங்கத்தின் முடிவை உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.

தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சர்மா தலைமையிலான அமர்வு முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தது. இடைக்கால உத்தரவை எதிர்த்து டெல்லி அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை நிராகரித்ததோடு, தனியுரிமை தொடர்பான அரசியலமைப்பு விதிகளுக்கு முரணானது என தெரிவித்துள்ளது.

ஆதாரை கட்டாயமாக்குவது சட்டப்பிரிவு 21-ன் மூலம் பாதுகாக்கப்பட்ட அடிப்படை உரிமைகளை மீறும் என்றும், அத்தகைய வரம்புகளை அரசியலமைப்பு ரீதியாக நியாயப்படுத்த முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. எனவே, குற்றஞ்சாட்டப்பட்ட சுற்றறிக்கைகள் அரசியலமைப்பு விதிகளுக்கு முரணாக உள்ளது. 2023ஆம் கல்வியாண்டுக்கான பள்ளிகளில் சீட் ஒதுக்கீட்டுக்கான ஆதார் அட்டை வேண்டும் என தனது ஐந்து வயதுக் குழந்தை படிக்க முடியவில்லை எனக் கூறி ஒருவர் தாக்கல் செய்த மனு மீது தனி நீதிபதி இந்த உத்தரவு பிறப்பித்துள்ளார்.

டெல்லி அரசாங்கம், ஜூலை 12, 2022 மற்றும் பிப்ரவரி 2, 2023 அன்று வெளியிடப்பட்ட சுற்றறிக்கைகளின் மூலம், தேசிய தலைநகரில் உள்ள தனியார் உதவிபெறாத அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் EWS, DG மற்றும் CWSN வகைகளின் கீழ் சேர்க்கைக்கு ஆதார் அட்டை அல்லது எண்ணை கட்டாயமாக்கியது குறிப்பிடத்தக்கது.

Vignesh

Next Post

ஆதார்-பான் இணைக்கவில்லையா?… செப்.30ம் தேதியுடன் காலக்கெடு முடிவடைகிறது!… உங்கள் கணக்குகள் முடக்கப்படும்!

Fri Sep 22 , 2023
PPF, NSC போன்ற சிறுசேமிப்பு கணக்குகளை வைத்திருப்பவர்கள் இதுவரை ஆதார்-பான் கார்டு இணைக்கவில்லை என்றால் கணக்குகள் முடக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பொதுவாக வருமான வரி செலுத்துவோர் உட்பட பான் – ஆதார் கார்டை வைத்திருக்கும் அனைவரும் இரண்டையும் இணைக்க வேண்டும் என மத்திய அரசு பல மாதங்களாகவே கூறிக்கொண்டு வருகிறது. அப்படி இணைக்கவில்லையெனில் பல சேவை முடக்கங்களை அரசு செயல்படுத்தும் எனவும் குறிப்பிட்டிருந்தது. இந்தநிலையில், […]

You May Like