fbpx

மொபைல் செயலி மூலம் Voter ID-யுடன் ஆதார் எண் இணைப்பது எப்படி…? அவசியம் தெரிஞ்சுக்கோங்க…

இந்திய தேர்தல்‌ ஆணையத்தின்‌ படி வாக்காளர்‌ பட்டியலுடன்‌ ஆதார்‌ எண்ணை இணைக்கும்‌ பணியானது தொடங்கி நடைடுபற்று வருகிறது. வாக்காளர்கள்‌ எவரேனும்‌ தங்களது அதார்‌ விவரங்களை வாக்காளர்‌ பட்டியலுடன்‌ இதுவரை இணைக்காமல்‌ இருந்தால், அவ்வாக்காளர்களுக்காக கால அவகாசம் 2024 மார்ச் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள்‌ தாமாக முன்வந்து தங்களுக்கு அருகாமையில்‌ உள்ள வாக்குசாவடி நிலையங்களில்‌ தங்களுடைய ஆதார்‌ மற்றும்‌ வாக்காளர்‌ பதிவு எண்‌ விவரங்களை படிவம்‌ 6B -யில்‌ பூர்த்தி செய்து வாக்குசாவடி நிலைய அலுவலரிடம்‌ ஒப்படைக்க வேண்டும். அல்லது மொபைல் செயலி மூலம் நீங்களே இணைத்துக் கொள்ளலாம்.

செயலி மூலம் இணைப்பது எப்படி…?

முதலில் கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து Voter Helpline செயலியை டவுன்லோட் செய்ய வேண்டும். அதில் ‘Voter Registration’ என உள்ள முதல் ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். பின்னர் அங்கீகார படிவம் 6B-யை ஓபன் செய்ய வேண்டும்.

அடுத்ததாக ‘லெட்ஸ் ஸ்டார்ட்’ ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். அதில் உங்கள் ஆதார் எண்ணுடன் பதிவு செய்யப்பட்டுள்ள மொபைல் எண்ணை உள்ளிட்டு, OTP அனுப்புவதற்கான ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். மொபைல் எண்ணுக்கு வரும் OTP -யை அதில் உள்ளிட்டு, Verify செய்ய வேண்டும். அதில் வாக்காளர் அடையாள அட்டை உள்ளது என்ற ஆப்ஷனை தேர்வு செய்து, அதன் எண்ணை (EPIC) உள்ளிட வேண்டும்.

தொடர்ந்து வாக்காளர்கள் தங்களது மாநிலத்தை தேர்வு செய்ய வேண்டும். பின்னர் ‘Proceed’ ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். அடுத்ததாக ஆதார் எண், பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் போன்ற விவரங்களை உள்ளிட வேண்டும். அதை செய்ததும் ‘சரி’ கொடுத்தால் படிவம் 6B தோன்றும். கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை மீண்டும் ஒரு முறை சரி பார்த்துக் கொண்டு ‘Confirm’ கொடுத்தால் அந்த படிவம் சமர்ப்பிக்கப்படும்.

Vignesh

Next Post

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு!… கல்லூரி பதிவுக்கான கால அவகாசம் நீட்டிப்பு!… முழுவிவரம் இதோ!

Mon Jul 31 , 2023
நடப்பு கல்வி ஆண்டுக்கான எம் பி பி எஸ் மற்றும் பி டி எஸ் மருத்துவ படிப்புகளில் சேர விண்ணப்பங்கள் கடந்த ஜூன் 28ஆம் தேதி முதல் ஜூலை 12ஆம் தேதி வரை பெறப்பட்டன. அதனை தொடர்ந்து ஜூலை 16ஆம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. இந்நிலையில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்பில் சேர்வதற்கான மாணவர்கள் தாங்கள் விரும்பும் கல்லூரிகளை பதிவு செய்வதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் 3ஆம் தேதி […]

You May Like