வேற்றுகிரகவாசிகள் அல்லது ஏலியன்கள் மற்றும் யூ.எஃப்.ஓ ஆகியவை தொடர்பான விசித்திரமான விஷயங்கள் அவ்வப்போது வெளிவந்துகொண்டே இருக்கின்றன.. பலர் வேற்றுகிரகவாசிகளையும், யூ.எஃப்.ஓக்களையும் நேரில் பார்த்ததாக கூறியுள்ளனர். ஆனால் இந்த கூற்றுகள் உண்மை என்பதை அறிவியல் பூர்வமாக நிரூபிக்க எந்த அதாரமும் இல்லை என்பதால் ஏலியன்கள் பற்றிய மர்மங்கள் இன்றும் தொடர்கின்றன..
பூமியில் வேற்றுகிரகவாசிகள் ஏற்கனவே இருப்பதாக ஒரு சில விஞ்ஞானிகள் நீண்ட காலமாக கூறி வருகின்றனர். ஏலியன்கள் பூமியில் இருந்து மனிதர்களை கடத்திய நிகழ்வுகளை அவர்கள் மேற்கொள் காட்டுகின்றனர்.. அந்த வகையில் டோனி ரோட்ரிக்ஸ் என்ற நபர் தன்னை ஏலியன்கள் கடத்தி சென்ற நபர் தனது கதையை சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொண்டுள்ளார்..
இதுகுறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் தனது 10 வயதில் வேற்றுகிரகவாசிகளால் கடத்தப்பட்டதாகவும், வேற்று கிரக உயிரினங்கள் அவரது உடலில் ஊடுருவும் நடைமுறைகளை மேற்கொண்டதாகவும் ரோட்ரிக்ஸ் கூறினார்.
தனது குடும்பத்துடன் ஒரு கிராமப்புற பண்ணை வீட்டில் வசித்து வந்த போது அவர் வேற்றுகிரகவாசிகளால் கடத்தி செல்லப்பட்டதாக தெரிவித்தார்.. ரோட்ர்கிஸின் பதிவில் “ வேற்றுகிரகவாசிகள் என்னை கடத்த ஒரு பிரகாசமான நீல நிற உருண்டையான வாகனத்தில் வந்தனர்.. நான் படுக்கையில் இருந்து எழுந்ததும், என் அருகில் ஒரு உருவம் நின்று கொண்டிருந்தது.. நான் கையை உயர்த்தி அதை தொட்டேன், அது உயிருடன் இருந்தது.. நான் சத்தம் போடுவதற்கு முன்பு, அது என்னை ஏதோ செய்தது. நான் செயலிழந்தேன், பின்னர் மூன்று அல்லது நான்கு குட்டையான ஊர்வன போன்ற தோற்றமுடைய உயிரினங்கள் என் படுக்கையின் அடிவாரத்தில் இருந்து வந்து என்னை படுக்கையில் இருந்து வெளியே இழுத்து வெளிச்சத்திற்கு அழைத்துச் சென்றன..
வேற்றுகிரகவாசிகள், மனதைக் கட்டுப்படுத்தும் திட்டத்தின் மூலம் என்னை கட்டுப்படுத்தினர்.. மேலும் அவர்கள் என்னை மரணத்திற்கு அருகில் கொண்டு வர மருந்துகளை வழங்கினர்… எனது தலையின் பின்புறத்தில் இருந்து செல்களை எடுத்தனர்..” என்று தெரிவித்துள்ளார்…
ஏலியன் கடத்தல் கதைகள் உண்மையா? சில மாதங்களுக்கு முன்பு,
யுஎஃப்ஒ நெட்வொர்க் (MUFON) ஆராய்ச்சியாளர் கிறிஸ் ஜோன்ஸ், ஏலியன்களால் கடத்தப்பட்டவர்கள் பகிர்ந்து கொள்ளும் அனுபவங்கள் உண்மையானதாக இருக்கலாம் என்று கூறியிருந்தார். மேலும்”பல வருடங்களாக கதைகள் மற்றும் சாட்சியங்களைப் பார்த்த பிறகு, வழக்குகளுக்கு இடையே மிகப் பெரிய ஒற்றுமை இருப்பதாக நான் நினைக்கிறேன். UFO பார்த்ததாக பலர் கூறியதை போலவே, இந்த நிகழ்வில் நிச்சயமாக ஏதோ இருக்கிறது.. வேற்றுகிரகவாசிகள் ஏற்கனவே பூமியில் உள்ளன.. ” என்று தெரிவித்தார்..