தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டின் கீழ் ஆவின் நிறுவனம் தமிழகம் முழுவதும் பால் உற்பத்தி, விநியோகம், விற்பனையை செய்து வருகிறது. இன்று ஒரு சில இடங்களில் பால் விநியோகம் தாமதமாகலாம் எனத் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஆவின் நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “சென்னையில் இன்று ஒரு சில இடங்களில் தவிர்க்க முடியாத காரணங்களால் பால் விநியோகத்தில் தாமதமாகும் என ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதன்படி பெரம்பூர், அண்ணாநகர், அயனாவரம், வில்லிவாக்கம், கொரட்டூர், மயிலாப்பூர், வேளச்சேரி, தாம்பரம் மற்றும் அடையாறு ஆகிய இடங்களில் பால் விநியோகம் ஒரு சில மணி நேரங்கள் தாமதமாகலாம். இதனை சீராக்க ஆவின் நிர்வாகம் போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அனைத்து இடங்களிலும் சீரான பால் விநியோகத்தை உறுதி செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், இருப்பினும் இத்தகைய காலதாமதத்திற்கு வருந்துவதாகவும் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் இந்த சூழலில் ஆவின் நிர்வாகத்திற்கு பொதுமக்கள் தங்கள் ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்வதாகவும் ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Read More : கோவையில் திமுகவின் டி.ஆர்.பி., ராஜா பணத்தோடு நிற்கிறார்!… Annamalai குற்றச்சாட்டு!