ஷாக்!… விலைவாசி உயரும் அபாயம்!… சுங்கச்சாவடி கட்டணம் உயர்வால் நிபுணர்கள் கருத்து!

Tollgate Fees Hike: சுங்கக்கட்டணம் உயர்வால் வாகனங்களின் வாடகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வந்த நாடாளுமன்ற தேர்தல் ஜூன் 1ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், இன்று (நள்ளிரவு 12 மணி) முதல் சுங்கச்சாவடி கட்டணம் மாற்றம் அமலுக்கு வந்துள்ளது. இதன் காரணமாக, ரூ.5 முதல் ரூ.20 வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 55 தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில், முதற்கட்டமாக 36 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. சென்னை புறநகரில் உள்ள பரனூர் மற்றும் ஆத்தூர் சுங்கச்சாவடிகளிலும் கட்டணம் உயர்த்தப்ட்டுள்ளது.

ஏற்கனவே உயர்ந்து வருகின்ற பெட்ரோல், டீசல் விலையால் அத்தியாவசிய பொருட்களின் விலை தாறுமாறாக ஏற்றம் கண்டு வருகிறது. தற்போது சுங்க கட்டணமும் உயர்வதால் மேலும் விலைவாசி உயரும் அபாயம் ஏற்படும். அதிகரித்து வரும் வேலையில்லா திண்டாட்டம் ஒரு புறமும், விலைவாசி உயர்வு மறுபுறமும் சேர்ந்து உழைக்கும் மக்களின் கழுத்தை நெருக்கிறது.

மேலும், சுங்கக்கட்டண உயர்வாக மளிகை, காய்கறிகளை ஏற்றிச்செல்லும் லாரி, சரக்கு வாகனங்கள் ஆகியவற்றின் வாடகையும் உயரும். இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரக்கூடும் என்று பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.

Readmore: கலைஞரின் 101-வது பிறந்தநாள்: முதலமைச்சர் ஸ்டாலின் இன்று மாலை அணிவித்து மரியாதை

Kokila

Next Post

குட் நியூஸ்...! இந்த சான்றிதழ் இருந்தால் போதும்... ஓட்டுநர் சோதனையில் இருந்து விலக்கு...!

Mon Jun 3 , 2024
அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சி மையம் மற்றும் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி தொடர்பாக மத்திய போக்குவரத்து துறை விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில்; சில ஊடகங்களில் பரப்பப்படும் செய்திகளைப் பொறுத்தவரை, 07.06.2021 தேதியிட்ட ஜி.எஸ்.ஆர் 394 (இ) மூலம் மத்திய மோட்டார் வாகன விதிகள் (சி.எம்.வி.ஆர்), 1989 இல் அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சி மையங்களை (ஏ.டி.டி.சி) பரிந்துரைக்கும் 31 பி முதல் 31 ஜே […]

You May Like