fbpx

கருக்கலைப்பு வழக்குகளில் அலட்சியமாக இருக்கக்கூடாது!… குஜராத் நீதிமன்ற தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் அதிருப்தி!

கருக்கலைப்பு வழக்குகளில் அலட்சியமாக இருக்கக்கூடாது என்று கருத்து தெரிவித்த உச்சநீதிமன்றம் இந்த விவகாரம் தொடர்பான வழக்கை இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைத்த குஜராத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அதிருப்தி தெரிவித்துள்ளது.

குஜராத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண் தனது 27 வார கருவை கலைக்க அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு இன்று(ஆகஸ்ட் 19) உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பாலியல் வன்கொடுமை காரணமாக கர்ப்பமான பெண்ணின் கருவை கலைக்க அனுமதி மறுத்த குஜராத் உயர்நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.

மேலும், ஆகஸ்ட் 8ம் தேதி குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் உரிய உத்தரவு பிறப்பிக்காமல் தாமதம் செய்தது ஏன்?. புதிய மருத்துவக் குழுவை உடனடியாக அமைத்து பாதிக்கப்பட்ட பெண்ணின் உடல்நிலை குறித்து ஆய்வு செய்து, அதன் அறிக்கையை இன்று (20-8-23)உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் பாலியல் வன்கொடுமையால் உருவான கருவை கலைக்கும் வழக்கில் மெத்தனமாக செயல்படுவதா?. இது தொடர்பாக விளக்கம் அளிக்க கோரி, குஜராத் அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

Kokila

Next Post

அதிகரிக்கும் குறைப்பிரசவங்கள்!… தடுக்க செய்ய வேண்டியவை என்னென்ன?

Sun Aug 20 , 2023
அதிகரிக்கும் குறைப்பிரசவங்கள் தடுக்க கர்ப்பிணிகள் என்னென்ன முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்பது குறித்து பார்க்கலாம். உலகளவில், 2020-ல் மட்டும் தோராயமாக 13.4 மில்லியன் குழந்தைகள் குறைப்பிரசவத்தில் பிறந்துள்ளனர். 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இறப்பு விகிதத்தில் குறைப்பிரசவம் முக்கிய காரணமாக உள்ளது. 2019 கணக்குப்படி, 9 லட்சம் குழந்தைகள்வரை இக்காரணத்தால் இறந்திருக்கலாம். உரிய மருத்துவ வசதி இருந்தால், இவர்களில் மூன்றில் ஒருபங்கு குழந்தைகளை காப்பாற்றியிருக்கலாம் என்று தரவுகள் குறிப்பிடுகின்றன. குறைப்பிரசவங்களில் 3 வகைகள் […]

You May Like