fbpx

நாடு முழுவதும் 40,000 பெண்களுக்கு “நை ரோஷ்னி” திட்டத்தின் கீழ் பயிற்சி…! மத்திய அரசு தகவல்..‌‌. !

கடந்த மூன்று ஆண்டுகளில், இந்தியா முழுவதும் சுமார் 40,000 பெண்கள் நை ரோஷ்னி திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றுள்ளதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்தார்.

அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்சிகள், தேசிய சிறுபான்மையினர் ஆணையச் சட்டம், 1992, பிரிவு 2(சி) இன் கீழ் அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த அதாவது, முஸ்லீம், சீக்கியர், கிறிஸ்தவர், பௌத்தர், சோராஸ்ட்ரியன் (பார்சிக்கள்) மற்றும் ஜெயின் சமூகத்தைச் சேர்ந்த பெண்களைத் தேர்ந்தெடுக்கின்றன. அனைத்து ஆதாரங்களில் இருந்தும் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கு மிகாமல் உள்ள பயனாளிகளுக்கு, இந்தத் திட்டத்தின் கீழ் பயிற்சிக்கான தேர்வில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

பெண் பயிற்சியாளர்களை அடையாளம் காண, தேர்வு செய்ய, கிராமப் பஞ்சாயத்து, நகராட்சி அமைப்பு, உள்ளாட்சி அமைப்பு ஆகியவற்றைச் சேர்ந்த தலைவரின் உதவியையும் ஏஜென்சிகள் பெறுகின்றன.2022-23 நிதியாண்டிலிருந்து பிரதமரின் விராசத் கா சம்வர்தன் (பாரம்பரியத்தை ஊக்குவித்தல்) திட்டத்தின் ஒரு அங்கமாக நை ரோஷ்னி திட்டம் இணைக்கப்பட்டுள்ளது.

இது சிறுபான்மையினரின், குறிப்பாக கைவினைஞர் சமூகங்களின், தொழில்முனைவுத் தலையீடுகள், திறன் மேம்பாடு, கல்வி மற்றும் தலைமைத்துவப் பயிற்சி மூலம் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Vignesh

Next Post

குழந்தைக்கு பெயர் தேடும்போது கணவரை பற்றி தெரியவந்த உண்மை..!! திகைத்துப் போன குடும்பத்தினர்..!!

Mon Jan 23 , 2023
அமெரிக்காவில் திருமணமாகி கர்ப்பமான பிறகு தனது கணவர் யார் என்ற அதிர்ச்சியூட்டும் உண்மை பெண்ணுக்கு தெரியவந்துள்ளது. அமெரிக்காவில் டிக்டாக்கில் 3,00,000 பின்தொடர்பாளர்களைக் கொண்ட பிரபலமான பெண் ஒருவர், தான் திருமணம் செய்துகொண்ட நபர் தனது உறவினர் என்பதை அறிந்து ஆச்சரியமடைந்ததாக சமீபத்தில் வெளிப்படுத்தியுள்ளார். அவர் கர்ப்பமானபோது, தங்களுக்கு பிறக்கப்போகும் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று தேடிக்கொண்டிருந்தபோது இந்த அதிர்ச்சியூட்டும் உண்மையை அந்த பெண் கண்டுபிடித்துள்ளார். அமெரிக்காவின் உட்டா மாகாணத்தைச் […]
குழந்தைக்கு பெயர் தேடும்போது கணவரை பற்றி தெரியவந்த உண்மை..!! திகைத்துப் போன குடும்பத்தினர்..!!

You May Like