மத்திய ரயில்வேயின் குளிர்சாதன வசதிகளுடன் கூடிய புறநகர் ரயில் பெட்டிகளுக்கு பயணிகளிடையே பெரும் வரவேற்று கிடைத்துள்ளது. ஏப்ரல் 2023 முதல் ஜூன் 2023 வரை மத்திய ரயில்வேயின் குளிர்சாதனத்துடன் கூடிய ரயில் பெட்டிகளில் 49.47 லட்சம் பயணிகளை ஏற்றியதன் மூலம் ரூ. 23.36 கோடி வருவாய் கிடைத்தது என இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான காலாண்டில் சராசரி பயணிகளின் எண்ணிக்கை மற்றும் வருவாய்:2022-23ம் ஆண்டில் ஏப்ரல் முதல் ஜூன் வரை பயணம் செய்த மொத்த பயணிகளின் எண்ணிக்கை 26.60 லட்சமாக இருந்த நிலையில், 2023 – 2024-ம் ஆண்டில் ஏப்ரல் முதல் ஜூன் வரை 53.77 சதவீதம் அதிகரித்து 49.47 லட்சமாக பயணிகளின் எண்ணிக்கை இருந்தது.
2022-23ம் ஆண்டில் ஏப்ரல் முதல் ஜூன் வரை 12.16 கோடி ரூபாய் வருவாய் கிடைத்த நிலையில், 2023 – 2024-ம் ஆண்டில் ஏப்ரல் முதல் ஜூன் வரை 52.05 சதவீதம் அதிகரித்து 23.36 கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது. 2022-23ம் ஆண்டில் ஏப்ரல் முதல் ஜூன் வரை ஒவ்வொரு மாதமும் சராசரியாக 8.86 லட்சம் பேர் பயணம் செய்த நிலையில், 2023 – 2024-ம் ஆண்டில் ஏப்ரல் முதல் ஜூன் வரை ஒவ்வொரு மாதமும் 16.49 லட்சம் பேர் பயணம் செய்தனர். இது 53.73 சதவிதம் அதிகமாகும்.