fbpx

யாரும் இத எதிர்பார்க்கல… 11 மற்றும் 12-ம் மாணவர்களுக்கு மட்டும்… பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு…!

11 மற்றும் 12-ம் வகுப்பில் தொழிற்கல்வி பாடப்பிரிவில் பயிலும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு திறன்கள் என்ற புதிய பாடம் இந்த ஆண்டு முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது; தொழிற்கல்வி பாடத்திட்டம் மற்றும் பாடநூல்களை சீரமைக்க உயர்மட்ட வல்லுநர் குழு அமைக்கப்பட்டது. இந்த வல்லுநர் குழு மாணவர்களின் வேலைவாய்ப்புத்திறனை மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகத்துடன் இணைந்து தொழிற்கல்வியில் உள்ள 12 பாடப்பிரிவுகளில் எட்டு பாடப்பிரிவுகளில் உள்ள பாடநூல்களை மறு சீரமைக்க பரிந்துரைத்திருந்தது.

விலையில்லா பாடப்புத்தகம்..! அதிகாரிகளுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முக்கிய ஆலோசனை..!

அடிப்படை இயந்திரவியல், அடிப்படை மின் பொறியியல், அடிப்படை மின்னணு பொறியியல், நெசவியலும் ஆடை வடிவமைப்பும், நர்சிங், வேளாண்மை அறிவியல், அலுவலக மேலாண்மையும் செயலியலும் தட்டச் கணினி பயன்பாடுகளும், கணக்குப்பதிவியிலும் தணிக்கையிலும் ஆகிய எட்டு பாடப்பிரிவுகளை பாடநூல் வல்லுநர்கள் ஆய்வு செய்து தற்பொழுது உள்ள பாடத்திட்டத்துடன் துறை சார் திறன் கழகம் பரிந்துரைத்த பாடத்திட்டத்தையும் இணைத்து மறு சீரமைப்பு செய்துள்ளனர்.

இந்த மறுசீரமைக்கப்பட்ட தொழிற்கல்வி பாடத் திட்டம் மாணவர்களின் வேலைவாய்ப்புத்திறன்களை வளப்படுத்தி மாணவர்கள் படித்து முடித்தவுடன் பல்வேறு திறன்சார்ந்த பணிகளுக்குச்செல்ல ஏதுவாக தொழிற்சாலை சார்ந்த திறன்களை முழுமையாகப்பெற்றுள்ளனர் என்ற சான்றிதழ் பெறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் அடிப்படை கட்டடப் பொறியியல், அடிப்படை தானியங்கி ஊர்தி பொறியியல், நெசவியல் தொழில்நுட்பம், உணவக மேலாண்மை பாடத்திட்டம் தற்போதைய நிலையில் தொடரும்.

அனைத்து 12 தொழில்களில் பாடப்பிரிவுகளிலும் கம்பியூட்டர் தொழில்நுட்பம் மற்றும் கம்பியூட்டர் பயன்பாடுகள் என்ற பாட நூலுக்கு மாற்றாக மாணவர்களின் வேலை வாய்ப்புத்திறன்களை மேம்படுத்தும் வகையில் 20,22,23-ம் கல்வி ஆண்டு முதல் வேலைவாய்ப்புத்திறன்கள் என்ற புதிய பாடம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. தொழிற்கல்வி பாடப்பிரிவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வேலைவாய்ப்புத்திறன்கள் என்ற பாடநூலினை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகத்தின் மூலம் வரும் நாட்களில் ஆன்லைன் மூலமாகப்பயிற்சி வழங்கப்படும். மேலும் வேலைவாய்ப்புத்திறன்கள் பாடத்தினை tnschools.gov.in என்ற இணையதளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

அனைவரும் அலர்ட்... இன்று நீலகிரி, ஈரோடு உள்ளிட்ட 20 மாவட்டத்தில் வெளுத்து வாங்க போகும் கனமழை...!

Wed Aug 3 , 2022
தமிழகத்தில் இன்று நீலகிரி, ஈரோடு, தர்மபுரி உள்ளிட்ட 20 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது; தமிழ்நாட்டின் மேல் நிலவும் வளிமண்டலச்சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தேனி, திண்டுக்கல், திருப்பூர் […]

You May Like