fbpx

அண்ணாமலையின் ராஜினாமா ஏற்பு?. வெளியாகும் முக்கிய அறிவிப்பு!. பரபரப்பில் அரசியல் வட்டாரங்கள்!

Annamalai: மக்களவை தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அளித்த ராஜினாமாவை கட்சி தலைமை ஏற்றுக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

18வது மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. இருந்த போதிலும் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் மற்றும் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் பாஜவுக்கு ஆதரவு அளித்தது. இதைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்றார்.

பாஜகவுக்கு ஆதரவு அளித்துள்ள நிதிஷ்குமார், சந்திரபாபு நாயுடு மீது பாஜவுக்கு நம்பிக்கை இல்லாமல் இருந்து வருகிறது. ஏனென்றால் எந்த நேரத்திலும் அவர்கள் காலை வாரி விட்டு சென்று விடுவார்கள் என்ற பயம் பாஜவிடம் இருந்து வருகிறது. தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து இருந்தால் சில தொகுதிகளை வெற்றி பெற்று இருக்கலாம். அப்படி அவர்கள் வெற்றி பெற்று இருந்தால் நமக்கு நம்பிக்கையாக இருந்து இருப்பார்கள்.

நிதிஷ்குமார், சந்திரபாபு நாயுடுவை நம்பி இருக்கும் நிலை ஏற்பட்டிருக்காது என்று டெல்லி பாஜ மேலிடம் கருதி வருகிறது. தமிழகத்தில் மக்களவை தேர்தலில் பாஜகவின் தோல்விக்கு பாஜ தலைவர் அண்ணாமலை எடுத்த தவறான முடிவு தான் காரணம் என்று மேலிடம் அண்ணாமலை மீது கடும் கோபத்தில் இருந்து வருகிறது. அதிமுக கூட்டணியை முறிக்க முக்கிய காரணமே அண்ணாமலையின் தேவையில்லாத வாய் பேச்சு தான்.

கட்சியின் பெயரை தாங்கியிருக்கக்கூடிய அண்ணாவையும், ஜெயலலிதா போன்ற தலைவர்களை அவதூறாக பேசியதால் தான் அதிமுக கூட்டணியை முறித்தது என்றும், டெல்லி மேலிடம் கடும் கோபத்தில் இருந்து வருகிறது. அதே நேரத்தில் தமிழகத்தில் மக்களவை தேர்தலில் ஓபிஎஸ் அணி, பாமக, தமாகா, அமமுக, புதிய நீதிக்கட்சி, ஐஜேகே, இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகள் இணைந்து மெகா கூட்டணி அமைத்தும் தோல்வியை தான் சந்திக்க நேரிட்டது.

இதையடுத்து தமிழகத்தில் மக்களவை தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அண்ணாமலை, பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து கடிதம் அளித்திருந்தார். மேலும் வௌிநாடு சென்று படிக்க போவதாகவும் அண்ணாமலை அப்போது தெரிவித்தார். இந்த மாதம் இறுதியில் லண்டனுக்கு படிப்பதற்காக செல்ல அவர் திட்டமிட்டு இருக்கிறார். இந்த நிலையில் பாஜ தலைவர் அண்ணாமலை திடீரென கடந்த சில தினங்களுக்கு முன்னர் டெல்லி சென்றார்.

டெல்லியில் கடந்த 1, 2ம் தேதி முகாமிட்டு இருந்த அண்ணாமலை பிரதமர் மோடி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்திக்க முடிவு செய்தார். இதற்காக நேரம் கேட்டிருந்தார். ஆனால் இரண்டு பேரும் அண்ணாமலையை சந்திக்க நேரம் ஒதுக்கி தரவில்லை. இதனால், அண்ணாமலை கடும் அதிருப்தியில் இருந்து வந்தார். கடைசியில் பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை மட்டும் சந்தித்து நான் ஏற்கனவே அளித்துள்ள என்னுடைய ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று அப்போது வலியுறுத்தினார்.

மேலும் படிப்புக்காக வெளிநாடு செல்ல போகிறேன். படிப்பு முடிந்து வந்த பின்னர் என்ன பதவி வழங்கினாலும் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன். பதவி வழங்காவிட்டாலும் தொண்டனான கூட இருக்கிறேன் என்றும் அப்போது அண்ணாமலை கூறியதாக கூறப்படுகிறது. அதற்கு ஜே.பி.நட்டா, மோடி, அமித்ஷாவிடம் பேசி விட்டு முடிவை சொல்வதாக தெரிவித்துள்ளார். இதற்கிடையில் அண்ணாமலை பாஜ அமைப்பு செயலாளர் பி.எல்.சந்தோஷை சந்தித்து பேசினார்.

இது தொடர்பாக பி.எல்.சந்தோஷ், ஜே.பி.நட்டாவிடம் பேசினார். அண்ணாமலைக்கு மாநிலங்களவை எம்பி பதவி வழங்கலாம். தேசிய அளவில் ஏதாவது ஒரு பொறுப்பு வழங்கி, எந்த மாநிலத்திற்காகாவது பொறுப்பாளராக நியமிக்கலாம். ஒரு தேர்தல் தோல்வியால் அவரை இழந்து விட வேண்டாம். இளைஞராக இருக்கிறார், துடிப்பாக இருக்கிறார். அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுக்கலாம் என்று பேசியதாக கூறப்படுகிறது.

இதனை கேட்ட ஜே.பி.நட்டா, பிரதமர் மோடி, அமித்ஷாவிடம் பேசி முடிவு செய்வோம் என்றும் அப்போது தெரிவித்ததாக கூறப்படுகிறது. எந்த முடிவும் எட்டப்படாததால் அண்ணாமலை கடும் அதிருப்தியில் இருந்து வருகிறார். இதையடுத்து அண்ணாமலை வெளிநாட்டிற்கு படிப்புக்கு செல்வதற்கான பணியில் மும்முரமாக இறங்கியுள்ளார். அதே நேரத்தில் தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை ஓரிரு நாளில் விடுவிக்கப்படுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Readmore: கிரேட் நிக்கோபார் திட்டம்!. இறுதிகட்ட பணிகள் தீவிரம்!. அடுத்த சில மாதங்களில் கட்டுமானம் தொடங்கும்!

English Summary

Acceptance of Annamalai’s resignation? Important announcement to be released! Political circles in excitement!

Kokila

Next Post

கோயில் சுவர் இடிந்து விழுந்து 9 சிறுவர்கள் பலி!. சாமி சிலை செய்த போது நடந்த சோகம்!

Mon Aug 5 , 2024
9 Children Killed After Temple Wall Collapses In Madhya ‍Pradesh's Sagar

You May Like