fbpx

#Weather: இந்த மாவட்டத்தில் எல்லாம் மழைக்கு வாய்ப்பு….! வானிலை மையம் கணிப்பு…!

11-ம் தேதி வரை தென் தமிழக மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் 10-ம் தேதி வரை தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் வரும் 11-ம் தேதி தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33- 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22- 23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்க கூடும். கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கு எந்த ஒரு எச்சரிக்கையும் இல்லை. வழக்கம் போல கடலுக்கு மீன்பிடிக்க செல்லலாம்.

Vignesh

Next Post

10 மாதங்களில் இந்திய ரயில்வேயின் சரக்கு வருவாய் 13 % அதிகரிப்பு...! மத்திய அமைச்சகம் தகவல்...!

Wed Mar 8 , 2023
நாடு முழுவதும் 2022-23 ஆம் நிதியாண்டின் முதல் 10 மாதங்களில் இந்திய ரயில்வேயின் சரக்கு வருவாய், கடந்த ஆண்டு இதே காலக் கட்டத்தில் ஈட்டியதைவிட அதிகரித்துள்ளது. 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2023 ஜனவரி வரையிலான காலக் கட்டத்தில் 1243.46 மில்லியன் டன் சரக்குகள் கையாளப்பட்டிருக்கிறது. இதே காலக் கட்டத்தில் முந்தைய ஆண்டு, 1159.08 மில்லியன் டன் சரக்குகள் கையாளப்பட்டிருக்கின்றன. இதன் மூலம் 7% சரக்குப் போக்குவரத்து அதிகரித்திருக்கிறது. […]

You May Like