fbpx

தீபாவளிக்கு ரூ.115 கோடிக்கு ஆவினகம் இனிப்பு மற்றும் கார வகைகள் விற்பனை…!

ரூ.115 கோடி இனிப்பு மற்றும் கார வகைகள் உள்ளிட்ட ஆவின் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழக மக்களுக்கு பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனை செய்யும் பணியில் ஆவின் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. 4.5 லட்சம் கிராமப்புற பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து பால் கொள்முதல் செய்யப்படுகிறது. தமிழகம் முழுவதும் 27 ஒன்றியங்கள் மற்றும் சென்னை இணையம் மூலமாக, சுகாதாரமான முறையில் தரம் ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு பால் மற்றும் சுமார் 200 வகையான பால் உபபொருட்களை தயாரித்து, நுகர்வோருக்கு நியாயமான விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

தீபாவளியை முன்னிட்டு, பல்வேறு வகையான சிறப்பு இனிப்புகள் மற்றும் கார வகைகள் தமிழகம் முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு பொதுமக்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும், தமிழகம் முழுவதும் உள்ள தனியார் தொழில் நிறுவனங்கள், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் அரசு அலுவலகங்களை அணுகி அவர்களுக்கு தேவையான இனிப்பு மற்றும் கார வகைகள் உள்ளிட்ட ஆவின் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. தற்போது, வரை ரூ.115 கோடி இனிப்பு மற்றும் கார வகைகள் உள்ளிட்ட ஆவின் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டை ரூ.10 கோடி அதிகமாகும்.

English Summary

According to the Tamil Nadu government, Rs. 115 crore worth of sweet and savory products have been sold

Vignesh

Next Post

காலையிலேயே அதிர்ச்சி!. மதுரையில் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து!. அதிர்ஷ்டவசமாக உயர்தப்பிய பயணிகள்!

Thu Oct 31 , 2024
Shock in the morning! Express train derails in Madurai! Lucky travelers!

You May Like