fbpx

ட்ரோன் பறக்க அதிரடி தடை..!! மீறினால் கடும் நடவடிக்கை..!! காவல்துறை எச்சரிக்கை..!! எங்கு தெரியுமா?

புதுச்சேரியின் நகரப்பகுதிகளில் ட்ரோன் பறப்பதற்கு தடைவிதித்து புதுச்சேரி காவல் துறை உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தின் கடற்கரை சாலையில் உள்ள பாதுகாக்கப்பட்ட பகுதிகளான
தலைமைச் செயலகம் மற்றும் பிரெஞ்சு துணை தூதரகம் அமைந்துள்ளது. நேற்று பிரெஞ்சு துணை தூதரகத்தின் மேல் 2 ட்ரோன்கள் பறந்தபடி படம்பிடித்துள்ளது. இதனைக்கண்ட தூதரக பாதுகாவலர்கள் பெரியகடை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து பிரெஞ்சு துணைத்தூதரகம் மேல் ட்ரோனை பறக்க விட்டவர்கள் யார் என்பது குறித்து புதுச்சேரி மாநில காவல்துறை விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

ட்ரோன் பறக்க அதிரடி தடை..!! மீறினால் கடும் நடவடிக்கை..!! காவல்துறை எச்சரிக்கை..!! எங்கு தெரியுமா?

இந்நிலையில், பாதுகாப்பு கருதி புதுச்சேரி நகரில் வெள்ளை நகரப்பகுதிகளில் உள்ள
ஆளுநர் மாளிகை, சட்டமன்றம், தலைமைச் செயலகம், பிரெஞ்சு தூதரகம், அரவிந்தர்
ஆசிரமம் உள்ளிட்ட முக்கியமான இடங்கள் உள்ளிட்ட 8 காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதிகள் ட்ரோன் பறக்க அதிரடியாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளை ட்ரோன் பறக்க தடை செய்யப்பட்ட சிகப்பு மண்டலங்களாக காவல்துறை அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த பகுதிகளில் தடையை மீறி ட்ரோன் பறக்கவிட்டால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது.

Chella

Next Post

’உங்க அரசியல் எல்லாம் என்கிட்ட வெச்சிக்காதீங்க’..!! விசிக-வை சீண்டும் வனிதா விஜயகுமார்..!!

Fri Jan 20 , 2023
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் இந்த வாரத்துடன் முடிவுக்கு வருகிறது. இதில் அசீம், விக்ரமன், அமுதவாணன், மைனா, ஷிவின் ஆகிய 5 பேர் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். இவர்களில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது இந்த வார இறுதியில் தெரிந்துவிடும். இதுவரை எந்த சீசனிலும் இல்லாத வகையில் இந்த முறை பிக்பாஸ் போட்டியாளரான விக்ரமனுக்கு அரசியல் தலைவரே வாக்கு கேட்டு பதிவிட்டது பெரும் சர்ச்சையை […]
’உங்க அரசியல் எல்லாம் என்கிட்ட வெச்சிக்காதீங்க’..!! விசிக-வை சீண்டும் வனிதா விஜயகுமார்..!!

You May Like