fbpx

இந்தியாவில் மழைநீரை சேமிக்க செயல் திட்டம்..‌.! மத்திய அரசு விளக்கம்

தண்ணீர் ஒரு மாநில விவகாரம் தொடர்புடையது என்பதால், மழைநீரைச் சேமிப்பதற்கான செயல்திட்டத்தை உருவாக்கும் பொறுப்பு முதன்மையாக மாநில அரசுகளிடம் உள்ளது. தொழில்நுட்ப மற்றும் நிதியுதவிகளை வழங்குவதன் மூலம் மாநிலங்களின் முயற்சிகளுக்கு மத்திய அரசு துணைபுரிகிறது. இருப்பினும், ஜல் சக்தி அமைச்சகம் “ஜல் சக்தி திட்டம்: மழைநீரை சேகரிப்போம்”-2023 என்ற இயக்கத்தை செயல்படுத்தி வருகிறது.

இது ஜல்சக்தி திட்டங்களின் வரிசையில் நான்காவது முறையாகும், இது குடியரசுத் தலைவரால் 04.03.2023 அன்று நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் 04.03.2023 முதல் நவம்பர் 30 வரை “குடிநீருக்கான ஆதார நிலைத்தன்மை” என்ற கருப்பொருளுடன் செயல் படுத்துவதற்காக தொடங்கப்பட்டது.

மத்திய நிலத்தடி நீர் வாரியம் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுடன் கலந்தாலோசித்து நிலத்தடி நீருக்கான செயற்கை செறிவூட்டலுக்கான மாஸ்டர் பிளான் – 2020 ஐ தயாரித்துள்ளது, இது மதிப்பிடப்பட்ட செலவு உட்பட நாட்டின் வெவ்வேறு நிலப்பரப்பு நிலைமைகளுக்கான பல்வேறு கட்டமைப்புகளைக் குறிக்கும் பெரிய அளவிலான திட்டமாகும். 185 பில்லியன் கியூபிக் மீட்டர் (பி.சி.எம்) பருவ மழையைப் பயன்படுத்துவதற்காக நாட்டில் சுமார் 1.42 கோடி மழைநீர் சேகரிப்பு மற்றும் செயற்கை ரீசார்ஜ் கட்டமைப்புகளை உருவாக்க மாஸ்டர் பிளானில் ஏற்பாடுகள் உள்ளன.

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் உள்ளூர் நிலைமைகளுக்கு ஏற்ப அவற்றை தத்தெடுப்பதற்கான மாநிலங்களின் வழிகாட்டுதலுக்கான வழிகாட்டுதல்களை உருவாக்கியுள்ளது. மாதிரி கட்டிட துணைச் சட்டங்கள், 2016 மற்றும் நகர்ப்புற மற்றும் பிராந்திய மேம்பாட்டுத் திட்டம் உருவாக்குதல் மற்றும் செயல்படுத்துதல் வழிகாட்டுதல்கள், 2014 ஆகியவற்றில் மழைநீர் சேகரிப்பு மற்றும் நீர் பாதுகாப்பு நடவடிக்கைகளின் தேவை குறித்து போதுமான கவனம் செலுத்தப்பட்டுள்ளது என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

Vignesh

Next Post

ரயில்வேயில் வேலை பார்க்க ஆசையா..? விண்ணப்பிக்க நாளையே கடைசி..!!

Tue Dec 12 , 2023
கொங்கன் இரயில்வே நிர்வாகம் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. அதில், Deputy General Manager பணியிடம் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்தப் பணியில் சேர விருப்பம் உள்ளவர்கள் நாளைக்குள் (டிசம்பர் 13) விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 63 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணியில் சேர விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன்பெறலாம். வேலைவாய்ப்பு விவரங்கள் […]

You May Like