புதிய வருமான வரி விதிப்பு முறையின் கீழ் ரூபாய் 7 லட்சத்துக்கு சற்று கூடுதலாக வருவாய் பெரும் நபர்களுக்கு சாதகமாக மத்திய அரசின் நிதி மசோதாவில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
64 திருத்தங்களுடன் நிதி மசோதா 2023 மக்களவையில் எந்த விவாதமும் இன்றி கடந்த வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்பட்டது. அதன் படி ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலாக உள்ள இந்த புதிய வருமான விதிப்பு நடைமுறையின் கீழ் 7 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ள நபர்கள் வருமானம் வரி செலுத்த தேவையில்லை.
ஆனால் ஆண்டு வருமானம் ரூ.7,00,100 ஆக இருந்தால் ரூபாய் 25,010 வருமான வரி செலுத்த வேண்டும். ரூபாய் 200 கூடுதல் வருமானம் என்ற போதிலும் வருமான வரியானது ரூ.25,010 கட்டவேண்டி இருக்கும்.