fbpx

Cannes 2024 : ‘கேன்ஸ் திரைப்பட விழாவில் முதல் இந்தியர்..’ சிறந்த நடிகை விருது பெற்ற அனசுயா சென்குப்தா!

இந்திய நடிகை அனசுயா சென்குப்தா பிரபல கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான விருது வென்று சாதனை படைத்துள்ளார். 77வது கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்த விருதை வென்றதன் மூலம் கேன்ஸ் திரைப்பட விழாவில் விருது பெறும் முதல் இந்திய நடிகை என்ற சாதனையை படைத்துள்ளார். 

பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் ஆண்டுதோறும் கேன்ஸ் திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. சினிமா கலைஞர்களின் சொர்க்கபுரியாக கேன்ஸ் நகரம் திகழ்கிறது. தீபிகா படுகோன், பிரியங்கா சோப்ரா, பூஜா ஹெக்டே, சோபிதா துலிபாலா, அதிதி ராவ், கியாரா அத்வானி உள்ளிட்ட பல நடிகைகள் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டு ரெட் கார்ப்பெட்டில் கவர்ச்சி உடைகளை அணிந்து கொண்டு போஸ் கொடுத்துள்ளனர். முதல் முறையாக இந்திய நடிகை ஒருவர் அங்கே சிறந்த நடிகைக்கான விருதை வாங்கி சாதனை படைத்துள்ளார்.

‘Shameless’ படத்தில் நடிகை அனசுயாவின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. பல்கேரியா நாட்டை சேர்ந்த இயக்குநர் கொன்ஸ்டாண்டின் போஜனோவ் இயக்கிய ‘Shameless’ படத்தில் அனசுயா, ரேணுகா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். காவல் அதிகாரியை கொலை செய்து விட்டு டெல்லியில் உள்ள பாலியல் தொழில் செய்யும் இடத்தில் சிக்கிக் கொள்ளும் ரேணுகா, அங்கு தேவிகா என்ற பெண்ணால் ஈர்க்கப்படுகிறார். அதற்கு பின் இருவரும் சந்திக்கும் சவால்கள் பற்றி படமாக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் அனசுயாவின் நடிப்பு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்திற்கு கேன்ஸ் திரைப்பட விழாவில் விருது பெற்று இந்திய சினிமாவிற்கு உலக அளவில் பெருமை சேர்த்துள்ளார். Shameless திரைப்படத்தோடு sunflowers were the first ones to know என்ற கன்னட குறும்படமும், bunnyhood ஆகிய படங்கள் கேன்ஸ் திரைப்பட விழாவில் la cinef selection என்ற திரைப்பட தரவரிசையில் முதல் மற்றும் மூன்றாவது இடங்களை பெற்றுள்ளது. டாக்டராக இருந்து இயக்குநரான சிதானந்தா நாயக் இப்படத்தை இயக்கியுள்ளார். மன்சி மகேஸ்வரி bunnyhood படத்தை இயக்கியுள்ளார்.

அனசுயா சென்குப்தா யார்?

அனசுயா மும்பையில் தயாரிப்பு வடிவமைப்பாளராக உள்ளார். சத்யஜித் ரே தொகுப்பில் மசாபா மசாபா மற்றும் ஸ்ரீஜித் முகர்ஜியின்  என்னை மறந்துவிடாதே போன்ற நிகழ்ச்சிகளில் பணியாற்றியுள்ளார். கொல்கத்தாவைச் சேர்ந்த இவர் ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்.

Next Post

ஜெயலலிதா இந்துத்துவா தலைவரா..? அண்ணாமலையை விளாசிய அதிமுக ஜெயக்குமார்..!!

Sat May 25 , 2024
On behalf of the AIADMK, AIADMK organizational secretary Jayakumar strongly condemned Annamalai for referring to Jayalalithaa as a 'Hindutva leader'.

You May Like