நடிகர் அன்னு கபூர், நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திரைப்பட நடிகர் அன்னு கபூர், நெஞ்சுவலி காரணமாக, சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் அதிகாலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. இது குறித்து சர் கங்கா ராம் மருத்துவமனையின் தலைவர் அஜய் ஸ்வரூப், கூறுகையில் நடிகர் மார்புப் பிரச்சனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை தற்போது முன்னேற்றம் அடைந்து வருகிறது. விரைவில் அவர் வீடு திரும்புவார் என்று தெரிவித்துள்ளார்.
ஹம்`, `ஏக் ருகா ஹுவா ஃபைஸ்லா`, `ராம் லகான்`, `காயல்`, `ஹம் கிசிசே கும் நஹின்`, `ஐத்ராஸ்`, `7 கூன் மாஃப்`, `ஜாலி’ போன்ற படங்களில் சிறந்த நடிப்பிற்காக அறியப்பட்டவர். கடந்த ஆண்டு OTT பிளாட்ஃபார்ம் அமேசான் பிரைம் வீடியோவில் திரையிடப்பட்ட `க்ராஷ் கோர்ஸ்` என்ற வலை நிகழ்ச்சியில் அவர் கடைசியாக நடித்தார். ஆயுஷ்மான் குரானாவின் முதல் படமான விக்கி டோனரில் அவர் நடித்ததற்காக தேசிய விருதையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.