நடிகரும் அரசியல்வாதியுமான அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர் தனது வீட்டுப் பணிப்பெண்ணுடன் ரகசிய உறவில் ஈடுபட்ட பழைய சம்பவத்தை நினைவு கூர்ந்துள்ளார்.
ஜனவரி 2011 இல் ஆளுநரின் அலுவலகத்தை விட்டு வெளியேறிய பிறகு, 65 வயதான நடிகர் அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கர், குடும்பத்திற்காக 20 வருடங்கள் வேலை செய்ததாகக் கூறப்படும் வீட்டுப் பணிப்பெண்ணான மில்ட்ரெட் பெய்னாவுடன் ரகசிய உறவில் இருந்ததாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. இதையடுத்து, தனது மனைவி மரியாவுடனான 25 வருட திருமண உறவை 2011ல் முடித்துக்கொண்டார். இந்தநிலையில், பீப்பிள் பத்திரிகைக்கு அர்னால்டு அளித்த நேர்காணலில் மீண்டும் வீட்டுப் பணிப்பெண்ணுடன் ரகசிய உறவில் ஈடுபட்ட பழைய சம்பவத்தை நினைவு கூர்ந்துள்ளார். அப்போது, தாத்தா பாட்டிகளாக ஒரு புதிய அத்தியாயத்தில் நுழையும்போது அவர்கள் எப்படி வாழத் திட்டமிடுகிறார்கள் என்ற கேள்விக்கு அர்னால்டு பதிலளித்தார்.
வீட்டுப் பணிப்பெண்ணுடனான தொடர்பு தவறு என்றும் இதனால்தான் எனது திருமண உறவு அழிவுக்கு வழிவகுத்தது என்று ஒப்புக்கொண்டார். மேலும் மனைவியுடனான உறவு குறித்து பேசிய அவர், “நாங்கள் (முதல்) அத்தியாயத்தை விட்டு வெளியேறவில்லை. ஏனென்றால், எங்களுக்குள் பகை இருந்தது போல் இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். எங்களுக்குள் சண்டை இல்லை.” எங்களது பிரிவால், குழந்தைகள் பாதிக்கப்படக்கூடாது என்பதில் நாங்கள் எப்போதும் தெளிவாக இருக்கிறோம். , நாங்கள் எப்போதும் குழந்தைகளைப் பற்றி ஆலோசனைகளை கலந்துகொள்வோம் என்றும் விடுமுறை நாட்கள், பிறந்தநாள் விழாக்கள் மற்றும் அன்னையர் தின விழாக்கள் மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகைகளை ஒன்றாக கொண்டாடுவோம் என்று கூறியுள்ளார். இது ஒரு வித்தியாசமான உறவாக இருந்தாலும் மரியாவிடம் அன்பை தவிர வேறு எதையும் உணர எனக்கு எந்த காரணமும் இல்லை என்றும் மரியாவுடனான எனது அத்தியாயம் என்றென்றும் தொடரும் என்று கூறியுள்ளார்.