இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஓடிடி படங்களில் ஒன்றாக தி கிரே மேன் மாறி உள்ளது.. அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் உள்ளிட்ட மார்வெல் சூப்பர் ஹீரோ படங்களை இயக்கிய ஆண்டனி – ஜோ ரூஸோ சகோதரர்கள் இப்படத்தை இயக்கி உள்ளனர்.. கிறிஸ் இவான்ஸ், ரியான் கோஸ்லிங், ரெஜி-ஜீன் பேஜ் மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தில் நடிகர் தனுஷும் முக்கிய கதாப்பத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் மும்பையில் நடைபெற்ற தி கிரே மேன் பத்திரிகையாளர் சந்திப்பில், இயக்குனர்கள் ஆண்டனி மற்றும் ஜோ ரூசோ ஆகியோர் தனுஷை ‘தேசிய பொக்கிஷம்’ என்று அழைத்தனர். இந்த படம் நாளை வெளியாவதை முன்னிட்டு மும்பையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குனர் ரூசோ பிரதர்ஸ் கலந்து கொண்டனர்.. அப்போது தான் தனுஷை தேசிய பொக்கிஷம் என்று புகழாரம் சூட்டினர்..

தி கிரே மேன் படத்தின் இந்திய விளம்பரத்திற்காக தனுஷுடன் இயக்குனர்கள், ருஸ்ஸோ பிரதர்ஸ் மட்டுமே இணைந்தனர். கிறிஸ் இவன்ஸ், ரியான் கோஸ்லிங், ரெஜி-ஜீன் பேஜ் உள்ளிட்ட நடிகர்கள் வரவில்லை. ஆனால் தி கிரேமேன் படக்குழுவினர், இந்திய ரசிகர்களுக்கு வீடியோ மூலம் செய்தி வெளியிட்டனர்.
அந்த வீடியோவில், “எங்கள் புதிய படத்தை நீங்கள் பார்ப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். அற்புதமான நடிகர்கள், அற்புதமான இயக்கம். தனுஷ் தனது முதல் ஹாலிவுட் படத்தில் நடித்துள்ளார்.. பல அதிரடி காட்சிகளில் நடித்துள்ளார். மன்னிக்கவும், இன்று எங்களால் உங்களுடன் இருக்க முடியவில்லை, ஆனால் ஜூலை 22 அன்று தி கிரே மேன் நெட்ஃபிக்ஸ்-ல் ஒளிபரப்பாகிறது. இது ஒரு பயங்கரமான அனுபவமாக இருக்கும்..” என்று குறிப்பிட்டுள்ளனர்..
தி கிரே மேன் படத்தின் மூலம் தனுஷ் ஹாலிவுட்டில் அறிமுகமாகிறார்.. இப்படம் நாளை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.. தி கிரே மேன் என்ற நாவலை வ்டிப்படையாக கொண்டு, உருவான இப்படம் நெட்பிளிக்ஸ் நிறுவனம் தயாரித்த அதிக பட்ஜெட் படமாகும்..
மார்வல் சூப்பர் ஹீரோ படங்களில், கேப்டன் அமெரிக்கா, விண்டெர் சோல்ஜர், சிவில் வார், அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார், அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் உள்ளிட்ட படங்களை ஆண்டனி – ஜோ ரூஸோ சகோதர்கள் இயக்கி இருந்தனர். இதில் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படம் உலகளவில் அதிக வசூல் செய்த படம் என்பது குறிப்பிடத்தக்கது.