fbpx

பிரபல நடிகர் கங்கா மாரடைப்பால் மரணம்…! அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்…!

பிரபல நடிகர் கங்கா மாரடைப்பால் காலமானார்.

பிரபல நடிகர் கங்கா மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 63. தனது சகோதரர் குடும்பத்துடன் வசித்து வந்து அவர் நேற்று மாலை மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இவர் பல்வேறு படங்கள் குணச்சித்திர நடிகனாக நடித்துள்ளார், இதில் முக்கியமாக உயிருள்ளவரை உஷா, கரையை தொடாத அலைகள், மீண்டும் சாவித்திரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதில் உயிருள்ளவரை உஷா அவரது முதல் படம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குணச்சித்திர பாத்திரங்கை ஏற்று அதிகம் நடித்தவர்.

1983-ஆம் ஆண்டில் ரி.ராஜேந்தர் இயக்கத்தில் வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற “உயிருள்ள வரை உஷா, பி.மாதவனின் தயாரிப்பு, இயக்கத்தில் வெளியான “கரையைத் தொடாத அலைகள்”, விசுவின் இயக்கத்தில் 1986-ஆம் ஆண்டு வெளியான ‘மீண்டும் சாவித்திரி”, 1986-ஆம் ஆண்டில் வெளியான “லட்சுமி வந்தாச்சு”, ஆர்.சி.சக்தியின் இயக்கத்தில் 1991-இல் வெளிவந்த ‘’அம்மா பிள்ளை’’ போன்ற பல படங்களிலும், சின்னத்திரை, நெடுந்தொடர்களிலும் நடித்துள்ளார். இவரது மறைவு திரைப்படங்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Vignesh

Next Post

வந்துவிட்டது சிக்குன்குனியாவிற்கு முதல் Ixchiq தடுப்பூசி!… அமெரிக்கா ஒப்புதல்!

Sat Nov 11 , 2023
சிக்குன்குனியா வைரஸிற்கான உலகின் முதல் தடுப்பூசிக்கு அமெரிக்க சுகாதார அதிகாரிகள் நேற்று ஒப்புதல் அளித்துள்ளனர். சிக்குன்குனியா வைரஸ் முக்கியமாக பாதிக்கப்பட்ட கொசு கடிப்பதன் மூலம் பரவுகிறது. சிக்குன்குனியா ஒரு வளர்ந்து வரும் உலகளாவிய சுகாதார அச்சுறுத்தலாகும். சிக்குன்குனியா வைரஸ் தொற்றின் அதிக ஆபத்து ஆப்பிரிக்கா, தென்கிழக்கு ஆசியா மற்றும் அமெரிக்காவின் சில பகுதிகளின் வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டலங்களில் உள்ளது. அங்கு சிக்குன்குனியா வைரஸை பரப்பும் கொசுக்கள் உள்ளன. சிக்குன்குனியா […]

You May Like