தமிழ் திரை உலகப் பொருத்த வரை தன்னோடு இணைந்து நடிக்கக்கூடிய சக நடிகைகளை திருமணம் செய்து கொள்வது புதிதல்ல. அந்த வகையில் இயக்குனர் பார்த்திபன் மற்றும் நடிகை சீதா இருவரும் காதலித்து பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டார்கள். இவர்கள் இரண்டு குழந்தைகள் பெற்றெடுத்த பிறகு இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேற்றுமையை அடுத்து இவர்களது இந்த பந்தம் நீடித்து நிலைத்து நிற்காமல் திருமணம் ஆன 11 வருடங்களில் விவாகரத்தில் முடிந்தது.
இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் பார்த்திபன் தான் இயக்கிய டீன்ஸ் திரைப்படத்தின் பிரமோஷனக்காக பல சேனல்களுக்கு தொடர்ச்சியாக பேட்டி அளித்திருக்கிறார். அதில் திருமணம் மற்றும் காதல் வாழ்க்கை குறித்து பார்த்திபன் பேசியதுதான் இணையத்தில் அதிகமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. அதில் அவர் பேசுகையில் பொதுவாக எல்லோரும் என்னதான் இருந்தாலும் நமக்காக ஒரு பெர்சன் இல்லை என்பது வருத்தமாக இருக்கிறது என்று நினைத்துக் கொண்டு இருக்காங்க.
நான் உட்பட எல்லாரும் அப்படித்தான் நினைக்கிறோம். ஆனால் எதையுமே ரீச் பண்ற வரைக்கும் (ஒரு இடத்திற்கு போற வரைக்கும்) தான் சுவாரஸ்யம் இருக்கும். எந்த பீலும் ரொம்ப நேரமா அப்படியே இருக்கும் என்று சொல்ல முடியாது. ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு போன பிறகு மீண்டும் கீழே இறங்கி மீண்டும் மேலே வரும். அப்படி இருந்தால் தான் சுவாரஸ்யமாக இருக்கும். அதனால் தான் நிறைய பிரிவு வருகிறது.
இதை சைக்காலஜிகளா யோசித்துப் பார்த்தா பொதுவா கணவன் மனைவி ரெண்டு பேரால் ஏழு வருஷம் தான் சேர்ந்து வாழ முடியும். ஏழாவது வருடத்தில் ஒரு அரிப்பு வந்துவிடும். அந்த அரிப்பு ரெண்டு பேரும் சேர்ந்து இருப்பதற்கான வாய்ப்பை கொடுக்காது. அதிகமான பிரச்சனை அந்த ஏழாவது வருடத்தில் தான் நடக்கும். அதில் தப்பிச்சுட்டா கொஞ்ச நாள் வாழ்க்கை போகும் அவ்வளவுதான்.
தாலி எல்லாம் மனசுக்கு கிடையாது கழுத்துக்கு மட்டும்தான். மனசு கடல் மாதிரி பெருசு. எனக்கு தெரிஞ்சு ஒரு சர்வே நடந்துச்சு அதில் 65 வயசு மதிக்கத்தக்க கணவன் மனைவிக்குள் தனித்தனியா கேள்வி கேட்டிருக்காங்க, அதில் அடுத்த ஜென்மத்தில் இவங்களே உங்களுக்கு புருஷனா அல்லது மனைவியா வரணுமா என்று கேட்டிருக்காங்க… அதில் அதிகமானோர் வேண்டாம் என்று கையெடுத்து கும்பிட்டு இருக்காங்க.
இப்போ ஏன் அதிகமா விவாகரத்து வருதுன்னா ரெண்டு பேரும் அதிகமா சம்பாதிக்கிறது தான். நான் என்னுடைய பொண்ணு கிட்ட கூட இதே அட்வைஸை தான் சொல்லுவேன். நீ நல்லா சம்பாரி உன்னுடைய கிரியேட்டிவிட்டியை காட்டு. இந்த உலகத்தில் நீ எந்த இடத்தில் வேணும்னாலும் உன்னுடைய திறமையை காட்டு. ஆனால் இவர்தான் உன்னுடைய வாழ்க்கை என்று யாரையும் முடிவு செஞ்சு விடாதே என்று நான் என்னுடைய வாழ்க்கையை புரிந்து கொன்றதை என்னுடைய பொண்ணு கிட்ட சொல்லுறேன்.
காதல் என்பது நல்லா இருக்கும். ஆனால் கணவன் மனைவியான பிறகு அங்க நிறைய பிரச்சனை இருக்கும். கசப்புகள் அதிகமாய் இருக்கும். எத்தனையோ பிரச்சனைகள் வரும் ஒன்னு பினான்சியல் பிரச்சனையாக இருக்கலாம் அல்லது சக்ஸஸ் ஆகுவதில் பிரச்சனையாக இருக்கலாம். கணவன் சக்சஸ் மனைவிக்கோ அல்லது மனைவி சக்சஸ் கணவனுக்கோ படுக்கையில் இருக்கலாம்… ஆனால் வாழ்க்கையில் வேறு விஷயத்தில் இருந்தால் பிரச்சனை தான் என்று பார்த்திபன் பேசி இருக்கும் நிலையில் இந்த வீடியோ இணையத்தில் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது.