fbpx

சற்றுமுன்…! சிகிச்சைக்கு பின் நடிகர் ரஜினிகாந்த் வீடு திரும்பினார்…!

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நடிகர் ரஜினிகாந்த் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினார்.

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (73), தற்போது ‘கூலி’ படத்தில் நடித்து வருகிறார். இதற்காக விசாகப்பட்டினத்தில் நடந்து வரும் படப்பிடிப்பில் கலந்து கொண்ட ரஜினி, கடந்த சில நாட்களுக்கு முன்புதான் சென்னை திரும்பினார். நடிகர் ரஜினிகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக செப்டம்பர் 30-ம் தேதி கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அவரது இதயத்திலிருந்து வெளியேறும் பிரதான ரத்தக் குழாயில் வீக்கம் ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அறுவை சிகிச்சை இல்லாத டிரான்ஸ்கேட்டர் முறையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ரஜினிக்கு ரத்தநாளத்தில் ஏற்பட்ட வீக்கத்தை சரிசெய்ய ஸ்டென்ட் பொருத்தப்பட்டது. ரஜினிகாந்த் கடந்த 30-ம் தேதி சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் சிகிச்சை முடிந்து மருத்துவ கண்காணிப்பில் இருந்த ரஜினிகாந்த் வீடு திரும்பினார்.

English Summary

Actor Rajinikanth returned home after treatment

Vignesh

Next Post

அதிகாலையிலேயே அதிர்ச்சி..!! கொலை வழக்கில் கைதான ரவுடி என்கவுன்ட்டர்..? திண்டுக்கல்லில் பரபரப்பு..!!

Fri Oct 4 , 2024
Police shot dead Richard Sachin, a rowdy who was arrested in a murder case in Dindigul.

You May Like