fbpx

பெரும் சோகம்… பிரபல நடிகர் சிகிச்சை பலனின்றி காலமானார்…! அதிர்ச்சியில் திரையுலகினர்…!

பிரபல மலையாளத் திரைப்பட நடிகர் சஜித் பட்டாளம் காலமானார்.

பிரபல மலையாளத் திரைப்பட நடிகர் சஜித் பட்டாளம் காலமானார். அவருக்கு வயது 54. இவர் எர்ணாகுளம் ஃபோர்ட் கொச்சியைச் சேர்ந்தவர். கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சஜித் வெப் சீரிஸ் மூலம் மிகவும் பிரபலமானவர். ஜானேமன், கனகம் காமினி கலகம், காலா போன்ற படங்களில் நடித்துள்ளார்.

மேலும் ஃபோர்ட் கொச்சியில் உள்ள பட்டாளம் என்ற இடத்தை பெயருடன் சேர்த்து பட்டாளம் என்ற பெயரை சஜித் ஏற்றுக்கொண்டார். ஆபரேஷன் ஜாவா இயக்குனர் தருண் மூர்த்தியின் சவுதி வெல்லகா படத்தில் சஜித் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். தருண் மூர்த்தி இயக்கத்தில் வெளிவரவிருக்கும் சவுதி வெள்ளக்கா படத்தில் சஜித் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விரைவில் இந்த படம் திரைக்கு வர உள்ள நிலையில் நடிகர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள சம்பவம் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Vignesh

Next Post

முக்கிய அறிவிப்பு... மிஷன் வாத்சல்யா திட்டத்திற்கான புதிய வழிகாட்டு நெறிமுறை...! மத்திய அரசு வெளியீடு...!

Mon Aug 8 , 2022
மிஷன் வாத்சல்யா திட்டத்திற்கான புதிய நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. குழந்தைகள் நலன் மற்றும் பாதுகாப்புக்காக, 2009-10-ம் ஆண்டு முதல், மத்திய நிதியுதவி திட்டமான ‘மிஷன் வாத்சல்யா’ என்ற குழந்தை பாதுகாப்பு சேவைகள் திட்டத்தை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது. ‘மிஷன் வாத்சல்யா’வின் நோக்கம், இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும், ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான குழந்தைப் பருவத்தைப் பாதுகாப்பது, அவர்களின் முழுத்திறனை கண்டறிந்து, முன்னேற்றத்துக்கான […]

You May Like