fbpx

இந்தி தெரியாததால் காக்க வைக்கப்பட்ட நடிகர் சித்தார்த்தின் பெற்றோர் – மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு!

மதுரை விமான நிலையத்தில் தனது பெற்றோர் இந்தி தெரியாது என தெரிவித்த காரணத்தால், பாதுகாப்பு படை வீரர்கள் நீண்ட நேரம் அவர்களை காக்க வைத்ததாக நடிகர் சித்தார்த் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர் சித்தார்த், அரசியல் சார்ந்த கருத்துகளை அடிக்கடி தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருவது வழக்கம். அந்த வகையில் இந்த முறை, மதுரை விமான நிலையம் வழியாக விமான பயணம் மேற்கொண்ட நடிகர் சித்தார்த்தின் பெற்றோர்களின் உடமைகள் மற்றும் லக்கேஜை மதுரை விமான நிலைய பாதுகாப்பு பணியாளர்கள் ஸ்கேன் செய்துள்ளனர். அப்போது அதனுள் நாணயங்கள் இருந்ததால் அதனை அதிகாரிகள் அகற்றுமாறு இந்தி மொழியில் தெரிவித்துள்ளனர். றச் சொன்னதால், அதற்கு சித்தார்த்தின் பெற்றோர்கள் இந்தி தெரியாது என ஆங்கிலத்தில் தெரிவித்துள்ளனர். மேலும் பாதுகாப்பு வீரர்கள் ஆங்கிலம் பேச மறுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் 20 நிமிடங்கள் காக்க வைத்து துன்புறுத்தியதாக நடிகர் சித்தார்த் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார். அந்த பதிவு வைரலாகிய நிலையில், வழக்கம் போல் அந்த பதிவை சித்தார்த் டெலிட் செய்துவிட்டார்.

Kokila

Next Post

’சீனாவில் கொரோனா அதிகரிப்பதற்கு இதுதான் காரணம்’..!! மத்திய அரசின் கொரோனா குழு தலைவர் முக்கிய தகவல்..!!

Wed Dec 28 , 2022
சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதற்கு 4 வகைகள் தான் காரணம் என்று இந்தியாவின் கொரோனா குழு தலைவர் தகவல் தெரிவித்துள்ளார். சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்த சமயத்தில் சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்புக்கு நான்கு வகைகள் காரணமாகின்றன என்று மத்திய அரசின் கொரோனா குழுவின் தலைவரான என்கே அரோரா தெரிவித்துள்ளார். அதாவது, ஒமைக்ரான் மாறுபாட்டின் BF.7 திரிபு 15% பாதிப்புகளுக்கு காரணம் […]

You May Like