தளபதி விஜய் நடிப்பில் இறுதியாக பீஸ்ட் திரைப்படம் வெளியாகியது. இதை தொடர்ந்து அடுத்ததாக வம்சி இயக்கும் வாரிசு படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகின்றார். இந்த திரைப்படத்தை தில்ராஜு தயாரிக்க தமன் இசையமைக்கிறார்.
இதில், விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகின்றார். படத்தின் படப்பிடிப்பு ஓரளவு முடிவடைந்த நிலையில், இதன் மற்ற பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது
இந்த திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது.
சமீபத்தில் இது குறித்த போஸ்டர்களை வம்சி இணையத்தில் வெளியிட்டார். அதுதான் இப்போது இணையதளங்களில் படு வைரலாகி வருகின்றது.
இந்த நிலையில், நடிகர் விஜய் தன்னுடைய ட்விட்டர் கணக்கின் டிபி படமாக, தளபதி ரசிகர் ஒருவர் உருவாக்கிய டிஜிட்டல் ஆர்ட் புகைப்படத்தை வைத்திருக்கிறார். தனது ரசிகரின் கலையை அங்கீகரித்து அழகு பார்த்த விஜயால் தற்போது ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். எங்கள் மீதான அன்பை இதைவிட சிறப்பாக வெளிப்படுத்த முடியாது என்று ரசிகர்கள் நெகிழ்ந்துவிட்டனர்.