fbpx

இன்று நடக்கும் ‘த.வெ.க’ கட்சியின் ஆலோசனை கூட்டம்.! தலைவர் ‘VIJAY’ எடுக்க இருக்கும் முக்கிய முடிவுகள்.!

நடிகர் விஜய்யின் (Actor Vijay), தமிழக வெற்றிக் கழக மாவட்ட தலைமை நிர்வாகிகள் இன்று ஆலோசனைக் கூட்டம் நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் கட்சியில் புதிய உறுப்பினர்களின் சேர்க்கை, உள்கட்சி கட்டமைப்பு ஆகியவற்றைப் பற்றி விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி, நடிகர் விஜய் தனது கட்சியின் பெயரை அறிவித்தார். ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரிடப்பட்ட அந்தக் கட்சிக்கு, ரசிகர்கள் பெரும் வரவேற்பை கொடுத்தனர். ஆயினும் கட்சி தொடங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்ட நாள் முதலே, பல விமர்சனங்களை சந்திக்க நேர்ந்தது. கட்சியின் பெயரில் ஒற்றுப்பிழை இருப்பதாக கூறி விமர்சனம் செய்தனர்.

கட்சியின் பெயரிலேயே தமிழைக் காப்பாற்ற முடியாத நடிகர் விஜய், தமிழக மக்களை எவ்வாறு காப்பாற்றுவார் என்றெல்லாம் சாடினர். நியாயமான விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என்று கூறிய விஜய் ஒற்றுப் பிழையை சரி செய்து தனது கட்சியின் பெயரில் ‘க்’ என்ற ஒற்று எழுத்தை சேர்த்து, திருத்தத்தை மேற்கொண்டு அதை அதிகாரப்பூர்வமாகவும் அறிவித்தார். அவருடைய கட்சிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கிய பின்னர் கட்சியின் கொடி சின்னம் ஆகியவை அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று காலை 9 மணி அளவில் பனையூரில் உள்ள, தமிழக வெற்றி கழக தலைமை செயலக அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடக்கவுள்ளது. இந்தக் கூட்டத்தில் புதிய உறுப்பினர்களின் சேர்க்கை, உள்கட்சி கட்டமைப்பு போன்றவற்றை பற்றி ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது. தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர், புஸ்ஸி ஆனந்த், கட்சியின் மாவட்ட தலைமை நிர்வாகிகளை இதில் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தி இருந்தார்.

தனது கட்சியின் பெயரை வெளியிடும்போது வெளியிட்ட அறிக்கையில் நடிகர் விஜய், தனது கட்சி வரவிருக்கின்ற 2024 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடாது என்றும் யாருக்கும் ஆதரவும் தரப்போவதில்லை என்றும் அறிவித்திருந்தார். மேலும் 2026 இல் நடைபெற இருக்கின்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றத்திற்கான வழி வகுப்பதே தனது இலக்கு என்றும் அறிவித்திருந்தார்.

நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், விஜய்யின் ரசிகர்கள் பலர் அவரது கட்சிக் கொடியையும், பெயரையும் பயன்படுத்தி பல தொகுதிகளில் வென்றுள்ளனர். விஜய்யின் ரசிகர்களுக்கே இவ்வளவு வரவேற்பு இருக்கும் நிலையில், விஜய் தேர்தலில் நிற்பது மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

English summary: Actor Vijay’s political party is hosting a meeting today to discuss the various attributes of it.

Next Post

TN School | மாணவர்களே உங்களுக்கும் ரூ.1,000 கிடைக்க வேண்டுமா..? எப்படி விண்ணப்பிப்பது..? விவரம் உள்ளே..!!

Mon Feb 19 , 2024
தமிழ்நாடு அரசுப் பள்ளியில் பயின்று கல்லூரிக்கு செல்லும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம் இந்தாண்டு முதல் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயிலும் மாணவிகளுக்கும் விரிவுபடுத்தப்படும். TN School | தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவிகளின் உயர்கல்விச் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டமானது மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம் என மாற்றி […]

You May Like