fbpx

இரட்டை போர் யானை, ஒரு வாகை மலர்.. தவெக கொடி உணர்த்துவது என்ன? – விஜய் விளக்கம்

நடிகர் விஜய் தொடங்கியிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டி அருகே வி.சாலையில் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய் உரையாற்றினார். தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்துக்கான பெயர் மற்றும் கொடிகான அர்த்தம் குறித்து விவரித்த வீடியோவை நடிகர் விஜய் வெளியிட்டார். விஜய் குரலில் அந்த வீடியோ வெளியானது.

தவெக கொடியானது, மேல், கீழ் அடர் சிவப்பு, நடுவில் மஞ்சள் நிறத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கொடியில் இரண்டு பக்கம் யானை வைக்கப்பட்டு உள்ளது. இவை போர் யானைகள் ஆகும். நடுவில் வாகைப்பூ வைக்கப்பட்டு உள்ளது. வாகைப்பூ தமிழ்நாட்டின் பூ ஆகும். அதை சுற்றி ஸ்டார்கள் வைக்கப்பட்டு உள்ளன. இந்த கொடி முழுக்க முழுக்க தமிழ், தமிழ் தேசியம் ஆகியவற்றை பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதை பார்க்க முடிகின்றது.

அடர் ரத்தச்சிவப்பு நிறம்: பொதுவாகவே சிவப்பு நிறம் புரட்சியின் குறியீடு. அந்த வகையில், இது அனைவரின் கவனத்தை பளிச்சென்று ஈர்க்கும் வகையில் இருக்கும். இது கட்டுப்பாட்டை, பொறுப்புணர்வை, சிந்தனைத் திறனை, செயல் தீவிரம் ஆகியவற்றை சொல்லும் நிறம் ஆக இருக்கிறது.

மஞ்சள் நிறம்: இது மகிழ்ச்சி, நம்பிக்கை, லட்சியம், மனத்தெளிவு, உற்சாகம், ஆற்றல், நினைவாற்றலைத் தூண்டுவது என இலக்கை நோக்கி உறுதியோடு ஓட வைக்கும் நிறம் இது.

வாகைப்பூ: இது வெற்றிக் குறியீட்டிற்கானப் பூ. போரில் வெற்றியோடு திரும்பும் மன்னனும், அவரது படையும் வாகைப்பூ சூடி வந்தார்கள் எனும் வர்ணனையை நாம் செய்யுள்களில் படித்திருப்போம். ஆனால், மன்னர் பெரும்பிடுகு முத்தரையர் போருக்கு செல்லும் முன்னே வெற்றியைக் கணித்து வாகைப்பூ சூடியபடி சென்றால் என்கிறது வரலாறு. இங்கு தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில் இருக்கும் வாகைப்பூ, மக்கள் வெற்றியைக் குறிப்பதாகும்.

இன்னும் சொல்ல வேண்டும் என்றால், நம் மண்ணின் வெற்றிக்கானது. எனவே, நாம் நெஞ்சாற நேசிக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும், உலகெங்கும் வாழுற தமிழர்கள, ஒரே நேர்கோட்டு சித்தாந்தத்தில் பயணிக்க வைத்து, வெற்றி வாகை சூடப் போவதற்கான உறுதிபாட்டை குறிப்பதற்கு தான் வாகைப்பூ நம் கட்சிக் கொடியில் இடம்பெற்றுள்ளது என தவெக தலைவர் விஜய் தெரிவித்தார்.

யானைகள்: மிகப்பெரிய பலத்தின் எடுத்துக்காட்டாக யானையை சொல்வார்கள். தன் நிறத்திலும், குணத்திலும், உருவத்திலும், உயரத்திலும் எப்போதுமே தனித்தன்மை கொண்டது தான் யானை. அதிலும், போர் யானைகள் தன்னிகரற்றது. போர் தந்திரம் பழகிய யானைகள், எதிரிகளோட படைகளைத் தகர்ப்பதில் கில்லாடிகள். தன்னோட முன்னங்கால்களை தூக்கி பிளிறிக்கொண்டு முன்னேறும் போர் யானைகள் எதிரிகளைப் போர் களத்தில் பீதியடைய வைக்கின்றன.

அப்படிப்பட்ட இரட்டைப் போர் யானைகள் தான் தவெக கட்சிக் கொடியில் இடம்பெற்றுள்ளது. இந்த யானைகள் எப்படிபட்டவர்களையும் அடக்கி வழிக்குக் கொண்டுவரும் என்று விஜய் தனது கட்சியின் கொடியில் உள்ள நிறம், போர் யானை, வாகை மலர் குறித்து தெளிவாக அனைவருக்கும் புரியும் படி விளக்கம் அளித்தார்.

Read more ; பெரியார் முதல் அஞ்சலையம்மாள் வரை.. தவெக கொள்கை தலைவர்களாக ஏன் இவர்கள்? – விஜய் விளக்கம்

English Summary

Actor Vijay released a video explaining the name and flag meaning of Tamil Nadu Vetri Kazhagam.

Next Post

Mirror Vastu Tips | வீட்டின் இந்த திசையில் கண்ணாடியை வைத்தால் துன்பம் பெருகுமாம்..!!

Mon Oct 28 , 2024
Placing a mirror in this direction of the house will increase misery.

You May Like