சமீபத்தில் பிரபல சூப்பர் ஸ்டார் வீட்டு வாரிசான, யுவராஜ்குமார் தன்னுடைய மனைவி கொடுமைப்படுத்துவதாக கூறி விவாகரத்து கேட்ட போது, அவரின் மனைவி ஸ்ரீதேவி யுவராஜுக்கும் நடிகை ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக கூறியிருந்தார். தற்போது, அந்த நடிகை யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
கன்னட திரையுலகில் அந்தஸ்துக்கு சொந்தக்காரர்களாக இருக்கும் ராஜ்குமார் வாரிசுகள் பெரிதாக எந்த ஒரு சர்ச்சையிலும் சிக்காமல் கவனமாக இருப்பார்கள். ஆனால், அப்படிப்பட்ட குடும்பத்து வாரிசான நடிகர் யுவராஜ் குமார், காதலித்து திருமணம் செய்து கொண்ட மனைவி ஸ்ரீதேவி, தன்னை கொடுமைப்படுத்துவதாக கூறி விவாகரத்து கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகும் நிலையில், ஸ்ரீதேவி சில மாதங்களிலேயே மேல் படிப்புக்காக வெளிநாடு சென்று விட்டார்.
இவர்கள் இணைந்து வாழ்ந்தது மிக குறைவான நாட்கள் மட்டுமே. எனவே, இவர்களின் விவாகரத்து விஷயத்தில் வேறு ஏதாவது விஷயம் இருக்குமோ என்ற சந்தேகமும் இருந்து வந்த நிலையில், ஸ்ரீதேவி தன்னுடைய வழக்கறிஞர் மூலம் தன்னிலை விளக்கம் கொடுத்தார். ”தனக்கும் தன்னுடைய கணவருக்கும் நல்ல உறவு தொடர்ந்து கொண்டிருந்த நிலையில், திடீரென உள்ளே வந்த நடிகை தான் இந்த விவாகரத்துக்கு காரணம் என கூறினார். வெளிநாட்டில் நான் படிக்கும் போது, தன்னுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சிலர் எனது கணவர் அந்த நடிகையிடம் நெருக்கம் காட்டுவது குறித்து கூறியபோது.. அதனை நான் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை.
ஆனால், நான் விடுமுறைக்காக இந்தியா வந்த போது தான், இவர்களின் பழக்கம் உண்மையென தெரியவந்தது. நான் இல்லாத போது அந்த இளம் நடிகையை பலமுறை என் கணவர் வீட்டிற்கே அழைத்து வந்துள்ளார். ஓட்டல் அறையில் அவர்களை நான் கையும் களவுமாக பிடித்தேன்“ என்று கூறியுள்ளார். இந்த விவகாரம் வெளியான போது, அந்த இளம் நடிகை யார் என்பது பலரது சந்தேகமாக இருந்த நிலையில், கிசுகிசுவில் சிக்கிய நடிகை தற்போது வாண்டடாக வாய்யை விட்டு சிக்கியுள்ளார்.
மனைவி ஸ்ரீதேவி வைரப்பா கூறியது நடிகை சப்தமி கௌடாவை தான் என்று தெரியவந்துள்ளது. இவர் ஸ்ரீதேவி தன்னுடைய பெயரை கலங்க படுத்தியதாக கூறி ரூ.10 கோடி கேட்டு மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார். ஒருபுறம் யுவராஜ் – ஸ்ரீதேவி விவாகரத்து வழக்கு நடந்து வர, விரைவில் இந்த மனு மீதான விசாரணையும் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.