fbpx

போலீசாரிடம் சிக்காமல் இருக்கும் நடிகை கஸ்தூரி.. முன் ஜாமின் கோரி மனு..!!

கடந்த வாரம் சென்னையில் இந்து மக்கள் கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பிரமாணர்களுக்கான போராட்டத்தில் கலந்து கொண்ட நடிகை கஸ்தூரி அரசு ஊழியார்கள் குறித்தும் தெலுங்கு பேசும் மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது பூதாகரமாக வெடித்தது. இதனால் மறுநாளே செய்தியாளர்களை சந்தித்து தான் சொன்ன கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக விளக்கம் கொடுத்தார். இருப்பினும் இந்த விவகாரம் அவருக்கு சிக்கலாக மாறியதால், இறுதியில் மன்னிப்பு கேட்டு வருத்தம் தெரிவித்தார். 

தெலுங்கர்கள் பற்றி அவதூறாக பேசியதாக நடிகை கஸ்தூரி மீது சென்னை எழும்பூர் போலீசார் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து சம்மன் வழங்க சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டுக்கு எழும்பூர் போலீசார் சென்றனர். அப்போது அவரது வீடு பூட்டுப்போட்டு பூட்டப்பட்டு இருந்தது. நடிகை கஸ்தூரி வீட்டில் இல்லை. இதையடுத்து அவரது செல்போன் எண்ணை போலீசார் தொடர்பு கொண்டனர். அப்போது செல்போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் சம்மனை வீட்டில் ஒட்டி வைத்தனர்.

இதனால், நடிகை கஸ்தூரி தலைமறைவானதாக சொல்லப்பட்டது. மேலும், அவரை எழும்பூர் போலீசார் தேடி வருகின்றனர். இரண்டாவது நாளாக தனிப்படை போலீஸார் கஸ்தூரியை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். காவல்துறையினர் நடவடிக்கை தீவிரம் அடைந்ததை அடுத்து நடிகை கஸ்தூரி முன்ஜாமின் கேட்டு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். வருத்தம் தெரிவித்த பின்னரும் அரசியல் உள்நோக்கத்தோடு, தன்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Read more ; TN Govt Jobs : தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறையில் வேலை.. சென்னையில் பணி..!!

English Summary

Actress Kasthuri has filed a petition in the Madurai branch of the High Court seeking anticipatory bail in the matter of defaming Telugu people.

Next Post

கணவனுக்கு சாப்பாடு போட மறுத்த மனைவி..!! கழுத்தை நெரித்துக் கொன்ற கொடூரம்..!! நடந்தது என்ன..?

Mon Nov 11 , 2024
Enraged, Manu strangles his wife with a piece of cloth lying on his shoulder. In this, he died of suffocation.

You May Like